Friday, November 8, 2013

ஆடி

நீதிபதி; ஜவுளிக்ககடையில் சேலை திருடிய பெண்ணுக்கு ரூ 5000 அபராதம்…விதிக்கிறேன்.... திருடியவர் ஏழை..என்பதாலும்..மாசம் ஆடி என்பதாலும்...ஆடித்தள்ளுபடி போக
ரூ 3000 செலுத்தினால் போதுமென தீர்ப்பு
கூறுகிறேன் .!

எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க

கணவன் : எங்கம்மா எது வாங்கினாலும் வாயில் போட்டுப் பார்த்துதான் வாங்குவாங்க!

மனைவி : அப்போ கொஞ்சம் எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க!

பிரியாணி போடும்!

சுத்தம் சோறு போடும்....

அப்போ..இடைத்தேர்தல்..?

பிரியாணி போடும்!

அடியா கொடுத்தே?

கோவத்துல் என் மனைவி என்னை அடிக்க வந்தப்ப, ஒண்ணு கொடுத்தேன் பாரு, அப்படியே அசந்துட்டா!

அடியா கொடுத்தே?

அரைப் பவுன் மோதிரத்தை!

ஏன்?

தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பு !

ஏன்?

மகளிர் அணியில யாரைப் பார்த்தாலும் ஜூரம்
அடிக்குதான்னு தொட்டு தொட்டு பார்க்கிறாரே!

நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!

டாக்டர் : நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!

அதுக்காக மீதிப் பணத்துக்குப் பதிலா இன்னொரு வைட்டமின் ஊசி போட்டுக்கச் சொல்றது நல்லா இல்லீங்க டாக்டர்!

எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கணவன் : இது உன் புதுப்புடவையா ?

மனைவி : எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கணவன் : இதுவரை நான் துவைக்காத புடவையா இருக்கே!

பயம் வரும்!

என்னது நம்ம கட்சிக் கொடியில் அடிக்கடி சின்னத்தை
மாத்தணுமா ?

ஆமாம் தலைவா! புதுசா வீச்சருவா சின்னத்தைப்
போட்டாத்தான் எதிர்க் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம்
பயம் வரும்!

என் சம்பளத்தை உயர்த்தணும்

என் சம்பளத்தை உயர்த்தணும்

ஸாரி..அது மட்டும் முடியாது, வேற என்ன வேணாலும்
கேளுங்க!

ஒ கே , மாசம் இரண்டு தடவை சம்பளம் கொடுத்திடுங்க!

இது…?சண்டைக்கரண்டி!!

சார், இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி

அப்போ..வித்தியாசமா...இருக்கே...இது...?

இது…?சண்டைக்கரண்டி!!

செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு?

செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து
நீக்கிட்டாரு?

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிய செலவுன்னு மெடிக்கல்
பில் வெச்சு லட்சங்கள் பல சுருட்டிட்டாராம்!

நூறு

ச்சே.. வாய் பேச முடியாதவக்கிட்ட கூட இந்த போலீஸ்காரர் மாமூல்
வாங்கியிருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?

உள்ளங்கையில் நூறுன்னு எழுதியிருக்கார் பாரு…!

ஏட்டும் சேட்டும்

என்ன சொல்றே ராம்குமார், ‘ஏட்டும் சேட்டும்' உன்
வாழ்க்கையில் ரெண்டு கண்கள் ‘ மாதிரியா?

திருட வேண்டிய இடத்தை ஏட்டு சொன்னா, திருடிய
பொருளை சேட்டு வாங்கிக்கிறாரே!

தலைவர் பதவியே போயிடுச்சே

தலைவர் பதவியே போயிடுச்சே…இனி என்ன செய்ய போறீங்க?

எனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை வச்சு, மருத்துவம்
செய்து பொழைச்சுக்குவேன்…!

எப்படிச் சொல்றே?


தலைவர் ரொம்ப புகழ்ச்சி எதிர்பார்ப்பாரு…!

எப்படிச் சொல்றே?

தன்னை, ‘விடிவெள்ளி’ன்னு கோஷம் போட்ட தொண்டரைக் கூப்பிட்டு கண்டிச்சு, ‘விடிதங்கம்‘ன்னு கோஷம் போட சொல்றாரு..!

சோப்பு டப்பாலே

தம்பி...இந்த சோப்பு டப்பாலே சின்ன சின்ன ஓட்டை எதுக்கு இருக்கு தெரியுமா?..

ஓட்டை பெரிசா இருந்தா சோப்பு கிழே விழுந்துரும் அதனாலே தான்...இது கூட தெர்லே...

நாய்

நாய் துரத்தற மாதிரி கனவு வருது டாக்டர்!

மூணு நாலு கல்லைக் கையிலே வெச்சுக்கிட்டு
தூங்குங்க!

ஆபரேஷன்

ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

த முருகர், விநாயகர் டாலரை

டாலரைப் பணமா மாற்றும் இடத்தில் நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..எப்படி?

கழுத்துல போட்டிருந்த முருகர், விநாயகர் டாலரைக் கொடுத்து பணம் கேட்டுத் தொலைச்சுட்டார்..!

இது நல்லாயிருக்கே,

ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு.

மாணவன்: இது நல்லாயிருக்கே, நீங்க தூங்க வைப்பீங்க.. நான் எழுப்பனுமா?

திருடன்

நிருபர் : ஏம்மா..வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்...

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க,என்..வீட்டு காரருதான்.. குடிச்சுட்டு வந்திருக்கார்னு நினைச்சுதான்....அந்த வெளு...வெளுத்தேன்....

அட ராமா!

வாத்தியார்: கம்பராமாயணத்தை எழுதியது யார்டா? கேள்விலேயே பதில் இருக்கு!
பையன்: ராமர் சார்!
வாத்தியார்: கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
பையன்: அப்போ கிருஷ்ணர் சார்!
வாத்தியார்: அட ராமா!
பையன்: அப்ப...கண்டிப்பா ராமர்தான் சார்!

எப்படி இருப்பான்?"

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."

(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)

(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)

கணவன்: அன்பே, வந்துட்டேன்

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?

கணவன்: BAD COMMAND OR FILE NAME.

மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?

கணவன்: ABORT,RETRY,IGNORE.

மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?

கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.

மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.

கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.

மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.

கணவன்: DATA TYPE MISMATCH.

மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.

கணவன்: BY DEFAULT.

மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?

கணவன்: HARD DISK FULL.

மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?

கணவன்: UNKNOWN VIRUS DETECTED.

மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?

கணவன்: TOO MANY PARAMETERS.

மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.

கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.

மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!

கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.

மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.

கணவன்: SHUT DOWN THE COMPUTER.

மனைவி: நான் போறேன்.

கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)



ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.

இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.

அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.

மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.

அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.

அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.

அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.

இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.

உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.

குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.

குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.

இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.

அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.
(உண்மை தானா...?)

காது கேட்காத தவளை

காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

நம்ம மந்த்ரிங்க

ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.

அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. அவன் வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.

அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.

மந்திரி,

"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன் என்றார்

அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.

இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

அப்பவே நம்ம மந்த்ரிங்க எல்லாம் அப்படித்தான் போல

வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க

சில நிமிடங்கள் இன்பமாயிருக்க "தம்" அடிக்கலாம் !!!

சில மணி நேரம் இன்பமாயிருக்க "தண்ணி"
அடிக்கலாம் !!!

சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!

வாழ் நாள் முழுவதும்
இன்பமாயிருக்க இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !!!

பெரியப்பா

பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும்''பாஸிடிவா'' பாருடா எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ''பாஸிடிவ்'' அம்சம்இருக்கும். அதிலே கவனம் வை நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.
''அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடிமட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான்கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்'' என்றுஅண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ? எனக்குச் சிறுவயதிலிருந்தே பெரியப்பா ஹீரோ போலவே
தெரிந்தார்.

தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில்ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன. வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்துவருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன்சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப்பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில்படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில்மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பைசென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலைவிஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.

அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத்திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது. ''பெரியப்பா இல்லையா?'' நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். ஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளேபோனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும்விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொருசூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.

பெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியேநினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப்படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு.அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசுஇல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு'' பெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை!'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே!'' என்றுபுன்சிரிப்புடன் என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போதுஇருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்தே போனார்.நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான். ''ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராகஇருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.