Monday, March 16, 2015

இப்ப அவன் ஜெயில்ல இருக்கான்"

நபா்1:- " வாங்க, எப்படி இருக்கீங்க?... மும்பைல வேலை தேடிப்போன உங்க மூத்த பையன் எப்படி இருக்கான்"...?
நபா்2:- "அதை ஏன் கேக்கறீங்க, இப்ப அவன் ஜெயில்ல இருக்கான்"...
நபா்1:- "என்ன சொல்றீங்க? .....அவன் ரொம்ப நல்ல பையனாச்சே... ஒரு வேளை வேலை கிடைக்காத அதிருப்தியில் "கொலை, கொள்ளை, "ன்னு ஏதும் சமூக விரோத கும்பல்ல சிக்கிட்டானா"...?
நபா்2:- "அப்படி ஏதும் தப்பு பண்ணி இருந்தால் கூட மனசு ஆறிப்போயிருக்குமே"!..
நபா்1:- "போலீஸ் புடிச்சுக்கிட்டு போகிற அளவிற்கு அதை விட என்ன பெரிய தப்பு பண்ணினானாம்"...?
நபா்2:- "ஊருக்கு புதுசாச்சுங்களே, மும்பைல ஒரு ஹோட்டல்ல போயி சாப்பிடறதுக்கு "பீஃப்" ஆா்டா் பண்ணி இருக்கான்"!..
நபா்1:-?????????

அட இப்படி கொல்ரானுங்களே!!!


1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
2. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!
3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும்,
அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?
6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .?
முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!
7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க,
நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?..

Tuesday, March 10, 2015

சிரிக்க மட்டும் ...



ஒரு பெண் குழந்தை இரவு படுக்க போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள் .
" கடவுளே என் அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை " என்று வேண்டுவாள் . இதை அவள் தந்தை பெருமையாக கேட்டு மகிழ்வார் .

ஒரு நாள் அவள் " கடவுளே என் அப்பா , அம்மா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை
தாததா Bye Bye " என்று சொன்னாள் . அப்பா திடுக்கிட்டார் .
அடுத்த நாள் தாத்தா இறந்து விட்டார் ....

சில மாதங்களுக்கு பிறகு இதே கதை பாட்டிக்கும் நடந்தது ......
அப்பா பயந்து நடுங்கி விட்டார் .....

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவள் "" கடவுளே என்னயும் அம்மாவையும் குஷியாக வை அப்பா Bye Bye " என்றாள் . அடுத்த நாள் பூரா அப்பாவுக்கு ஒரே டென்ஷன் . வேலை எதுவும் ஓடவில்லை. நடுங்கிக்கொண்டே நாள் முழுதும் கழிந்தது . ஆபீசிலிருந்த திரும்பி வந்த மனைவியும் டென்ஷன் ஆக காணப்பட்டார் .
"உனக்கு என்ன ஆச்சு " என்று கேட்டார் அப்பா

" இன்னிக்கு ஆபீஸ்ல எங்க பாஸ் திடீர்னு மயங்கி விழுந்து செத்துட்டார் "

"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம அய்யாசாமி.

"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

"என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"

"அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"

"அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்"

பேருந்து நிறுத்தம் ஒன்றில் ...

பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பேருந்துக்காக வெகு நேரமாய் காத்துக்கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு கோழி இருந்தது. பேருந்து வந்ததும் அவர் ஓடி சென்று பேருந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒரு இங்கிலாந்துகாரர் அமர்ந்திருந்தார். முதியவரைப் பார்த்ததும் அவர் லேசாக புன்னகைத்தார். பதிலுக்கு இவரும் புன்னகைத்தார். சிறிது நேரம் கழித்து அதே புன்சிரிப்புடன் அந்த இங்கிலாந்துக்காரர் கேட்டார் :ஹாய் வேர் ஆர் யு கோயிங்?........ ( where are u going?) 
முதியவர் : (பையை ஒருமுறை பார்த்துவிட்டு ) வேற யாரோட கோழியும் இல்லங்க......இது என்னோட கோழி......
இங்கிலாந்துக்காரர் : (சிறிது அதிர்ச்சியுடன் ) வ்வாட்?..... (what?)
முதியவர் : (சிறிதும் அசராமல் ) வாத்து இல்லைங்க....இது கோழி.....
இங்கிலாந்துக்காரர்: ( மிகவும் கடுப்பாகி கோபத்துடன்) கெட் அவுட்......( get out..)
முதியவர் : ( மிகவும் அமைதியாக) கெட்ட அவுத்து விட்டா கோழி ஓடி போயிடும்ங்க....
இங்கிலாந்துக்காரர் : ?????!!!!

அரண்மனையில் ஒரு போட்டி!


விஷ பாம்புகள் நிறைந்த
ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000
வராகன் பொன், அல்லது 10
கிராமங்கள், அல்லது தன்
ஒரே மகளான இளவரசியை திருமணம்
செய்வது, இந்த மூன்றில்
ஒரு பரிசை போட்டியாளர்
தேர்ந்தெடுக்கலா ம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால்
போட்டி அறிவித்து வெகு நேரம்
ஆகியும் யாரும்
போட்டிக்கு வரவே இல்லை.
திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில்
குதித்ததும் மன்னருக்கு குஷி.
உயிரையும் துச்சமாக
மதித்து ஒரு சாதனையாளன்
போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக
கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து,
பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!
ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால்
இளவரசியை திருமணம்
செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில்
ஒன்றை தானே பரிசாக
அறிவித்து இருந்தேன்.
மூன்றுமே வேண்டாம்
என்று சொல்லி விட்டாயே? ஆனாலும்
உன்னை வெறும் கையுடன் அனுப்ப
எனக்கு மனம் வரவில்லை.
உனக்கு என்ன
வேண்டுமோ அதை கேள், கட்டாயம்
அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில்
தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

உச்சக்கட்ட மானபங்கம் :



ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப
போன் வந்துச்சி ...

பார்த்தா புது நம்பர்...

யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Hello... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work
பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

"பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.?" ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே..! "ன்னேன் நான்.
அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone
பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ ...!

செல்லகுட்டி…. என் கண்ணு….

பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.

அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?

மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க….

அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி…. என் கண்ணு….டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?

மகன்:- (பத்தடி தள்ளி நின்று…) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா…

அம்மா:- ???????

பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?

"என் பொண்டாட்டி சமையலை வாயில
வைக்கமுடியாது; அவ பேச
ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம்
சொல்றே...?" 

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன்
கிடைக்கும்னு சொன்னாங்க!...

நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?

ஆ‌ண் : ஒரு பெண்ணை.

‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?

ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

Jokes Collection - 3

1. ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம் 
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

2. அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம். 
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? 
அருண் :எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.

3. மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

4. கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது

5. நபர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நபர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.

6. ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
வந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.

எப்படிறா 5 கோழி வரும்?

ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ? ?

டிக்கெட் இல்லாததுக்கு

ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்துட்டு தேவையில்லாததை
எல்லாம் பேசறான் சார் இவன்…!
-
அப்படி என்ன பேசறான்?
-
ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு, காசு இல்லேன்னா,
மாவாட்டற மாதிரி, இங்கே டிக்கெட் இல்லாததுக்கு
ஒரு மணி நேரம் டிரெயின் ஓட்டறேன்னு சொல்றான்…!

இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது....

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.

முதலில் ஜன்னலை மூடுங்கள்..
ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.

அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்.!

நான் கேட்ட கேள்வியில் விழுந்தடித்து ஓடினான்.....

யாரும் இல்லாத ஒரு இடத்தில தனியாக அமர்ந்திருந்தேன்...

யாரோ ஒருவன் என்னிடம் பேச முயன்றான்....

நான் கேட்ட கேள்வியில் விழுந்தடித்து ஓடினான்.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"என்ன நான் உன் கண்களுக்கு தெரிகிறேனா?"

பசங்களுக்கு ஒண்ணே ஒண்ணு தான் பிடிக்கும்...

பொண்ணுங்களுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும்
ஒண்ணு கிறுக்கன் மாதிரி இருக்க பசங்கள பிடிக்கும்
இன்னொன்னு நல்லா இருக்க பசங்கள கிறுக்கன் ஆக்குறது பிடிக்கும்.
பசங்களுக்கு ஒண்ணே ஒண்ணு தான் பிடிக்கும்
.
.
.
வேற என்ன, கிறுக்கு தான் புடிக்கும்....

பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போறாங்கடா....

இளைஞன் ஒருவன் தனது முடியை நீளமாக வளர்த்திருந்தான். 

அது அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவனுடைய அப்பா முடியை வெட்டிக் கொள்ளுமாறு பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை.

ஒருமுறை அப்பா சொன்னதும் அவன் எரிச்சலடைந்தான்.

"நான் முடி வளர்த்தா உங்களுக்கென்னப்பா? நான் முடியை எல்லாம் வெட்டிக் கொள்ளமாட்டேன்'' என்றான்.

அப்பா வருத்தத்துடன் சொன்னார்:

"உன் அக்காவைப் பெண் பார்க்க நம் வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் உன்னையப் பார்த்துட்டு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போறாங்கடா"

Monday, March 9, 2015

பாவ மன்னிப்பு....

ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தான்.
"பாதர்... நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் மன்னிப்பு கிடைக்குமா?"
”சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்”
“பாதர், இரண்டாம் உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக் கொள்ள இடம் தந்து விட்டேன்”
“இதொன்றும் பாவமில்லை, நீ போகலாம்”
“பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாங்கி விட்டேனே? “
“இது பாவம் தானென்றாலும், அவனைக் காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது”
“இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது பாதர்,,, ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி”
“சொல் மகனே”
“போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?”
“ ??????? !!!!!!!!!!!!!!!! ??????????????”

'வேண்டாத' தெய்வமே இல்லை....

"நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எந்த கடவுளை கும்பிடுவீங்க..?.."
"கல்யாணத்துக்கு முன்னாடி 'விநாயகரை' கும்பிடுவேன்...ம்ம்ம்ம்..கல்யாணத்திற்கு அப்புறம் நான் 'வேண்டாத' தெய்வமே இல்லை....!.."

***************************************************************************
"பயம்னா என்னன்னே தெரியாம வளர்ந்திட்டேன் டாக்டர்.."
"ஓ..ஓ.. ! இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலையா ..?.."

***************************************************************************
"டாக்டர் ஏன் அவர் தன் மனைவியை சத்தம் போட்டுக்கிட்டே இருக்கார்..?.."
"அப்பப்ப அவங்க சமையலுக்கு காய் நறுக்க ஆபரேசன் கத்தியை எடுத்து 'யூஸ்' பண்றாங்களாம்..!..

***************************************************************************

நான் போக மாட்டேன்

கணவன்: "தொப்புன்னு சத்தம் கேட்டதே..கிணத்துலே குதிச்சது யார்ன்னு போய் சீக்கிரம் பாரு..."
மனைவி: " நான் போக மாட்டேன்...குதிச்சது உங்க அம்மா இல்லைன்னு தெரிஞ்சா அந்த ஏமாற்றத்தை என்னாலே தாங்கிக்க முடியாது.."..
**********************************************************************************
ஆசிரியர்: "என்னடா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கே...?.."
மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் 'ஸ்டெப்' க்கு மார்க் போடுவேன்னு..!.."
**********************************************************************************
ஆசிரியர்: "என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டர் ஆகிட்டான்; சுமாரா படிச்சவன் பஸ்லெ கண்டக்டர் ஆகிட்டான்..இதுலே இருந்து என்ன தெரியுது..?.."
மாணவன்: "ரெண்டு பேருமே, டிக்கெட் கிழிக்கிற வேலையில் தான் இருக்காங்கன்னு தெரியுது..."..
**********************************************************************************

Thursday, March 5, 2015

பெரிய மிலிட்டரி மேனா வருவான் போல இருக்கு

டீச்சர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி மேனா வருவான் போல இருக்கு.....
அம்மா : எப்படிச் சொல்றீங்க...
டீச்சர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே தான் பாஸ் பண்றான் !!!

மக்கா.. நாங்க யாரு!!!

ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?

மாணவன்: "இரும்பு"

ஆசிரியர் : எப்படி ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன் = "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்...
ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன்,
எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

ஏன் அப்படி சொல்றீங்க?

உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!"

"அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌"

"ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?"

"என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு.... ?"

பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான்

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

3 மருமகன்கள்

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள். அதில் கடைசி மருமகன்
நம்ம நாராயணாசாமி.

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம்
போனாள்.

நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,
மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார்
நின்னுட்டுருந்தது.

அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.
"மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.
அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.
" மாமியாரின் அன்புப் பரிசாக.."

மூன்றாவது நம்ம நாராயணாசாமிக்கும் இந்த சோதனை நடந்தது.

அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா "'லுக்கு" விட்டப்ப
நாராயணாசாமி சொன்னார்,

"போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும்
சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள், நாராயணாசாமியின் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும்
வெளிநாட்டு கார் நின்னுச்சு..

"மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோடு...!

தகப்பனும்,மகனும்!.

இரண்டு குடிகாரர்கள் ஒரு மதுபானக் கடைக்கு வந்தனர்.நன்றாகக் குடித்து விட்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.பேச்சு முடிவில் ஒருவன் சொன்னான்,''என் பெயர் ராமு.''அடுத்தவன்,''அட,என் பெயர் கூட சோமு,''என்றான்.
ராமு:நான் அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
சோமு:அட,நானும் கூட அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
ராமு:நான் அங்குள்ள அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன்.
சோமு:அடடா,நாம் நெருங்கி வந்து விட்டோம்.நானும் மூன்றாவது தளத்தில்தான் வாழ்கிறேன்.
ராமு அப்படியா,என் வீட்டின் கதவிலக்கம் 303.
சோமு:என்ன ஆச்சரியம்!என் வீட்டில் எண்ணும் அதுதான்!
மூன்றாவது ஒரு நபர்:இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?ஒன்றுமே புரியவில்லையே!
கடைப் பணியாள் :ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளில் இவர்களோடு பெரிய ரோதனையாய்ப் போச்சு.இவர்கள் இருவரும் தகப்பனும்,மகனும்!.

“எப்படி மைலார்ட்?”

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

Jokes Collection - 2

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
-----------------------------------------------------
"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
-----------------------------------------------------
"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?"
"அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"
-----------------------------------------------------
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
------------------------------------------------------
"மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
"என்ன வேலை?" "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"
-----------------------------------------------------
"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
-----------------------------------------------------
"தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?" "பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"
-----------------------------------------------------
"என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
"அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
-----------------------------------------------------
"பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"
"குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"
-----------------------------------------------------
"தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"
"அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"
-----------------------------------------------------
"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"
-----------------------------------------------------
"போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
"ஏன் சாமி?"
"எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"
-----------------------------------------------------
"கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"
-----------------------------------------------------
"இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
"ஏன் சார்..?"
"கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"
------------------------------------------------------
"இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
"தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"
-----------------------------------------------------
"அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
"எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!"

Jokes Collection - I

ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு.

மாணவன்: இது நல்லாயிருக்கே, நீங்க தூங்க வைப்பீங்க.. நான் எழுப்பனுமா?
==============
டாலரைப் பணமா மாற்றும் இடத்தில் நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..எப்படி?

கழுத்துல போட்டிருந்த முருகர், விநாயகர் டாலரைக் கொடுத்து பணம் கேட்டுத் தொலைச்சுட்டார்..!
====================
ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
===============
நாய் துரத்தற மாதிரி கனவு வருது டாக்டர்!

மூணு நாலு கல்லைக் கையிலே வெச்சுக்கிட்டு
தூங்குங்க!
=============
தம்பி...இந்த சோப்பு டப்பாலே சின்ன சின்ன ஓட்டை எதுக்கு இருக்கு தெரியுமா?..

ஓட்டை பெரிசா இருந்தா சோப்பு கிழே விழுந்துரும் அதனாலே தான்...இது கூட தெர்லே...
============
தலைவர் ரொம்ப புகழ்ச்சி எதிர்பார்ப்பாரு…!

எப்படிச் சொல்றே?

தன்னை, ‘விடிவெள்ளி’ன்னு கோஷம் போட்ட தொண்டரைக் கூப்பிட்டு கண்டிச்சு, ‘விடிதங்கம்‘ன்னு கோஷம் போட சொல்றாரு..!
==========
தலைவர் பதவியே போயிடுச்சே…இனி என்ன செய்ய போறீங்க?

எனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை வச்சு, மருத்துவம்
செய்து பொழைச்சுக்குவேன்…!
================
என்ன சொல்றே ராம்குமார், ‘ஏட்டும் சேட்டும்' உன்
வாழ்க்கையில் ரெண்டு கண்கள் ‘ மாதிரியா?

திருட வேண்டிய இடத்தை ஏட்டு சொன்னா, திருடிய
பொருளை சேட்டு வாங்கிக்கிறாரே!
================
ச்சே.. வாய் பேச முடியாதவக்கிட்ட கூட இந்த போலீஸ்காரர் மாமூல்
வாங்கியிருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?

உள்ளங்கையில் நூறுன்னு எழுதியிருக்கார் பாரு…!
==========
செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து
நீக்கிட்டாரு?

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிய செலவுன்னு மெடிக்கல்
பில் வெச்சு லட்சங்கள் பல சுருட்டிட்டாராம்!
=========
சார், இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி

அப்போ..வித்தியாசமா...இருக்கே...இது...?

இது…?சண்டைக்கரண்டி!!
=============
என் சம்பளத்தை உயர்த்தணும்

ஸாரி..அது மட்டும் முடியாது, வேற என்ன வேணாலும்
கேளுங்க!

ஒ கே , மாசம் இரண்டு தடவை சம்பளம் கொடுத்திடுங்க!
===============
என்னது நம்ம கட்சிக் கொடியில் அடிக்கடி சின்னத்தை
மாத்தணுமா ?

ஆமாம் தலைவா! புதுசா வீச்சருவா சின்னத்தைப்
போட்டாத்தான் எதிர்க் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம்
பயம் வரும்!
===============
கணவன் : இது உன் புதுப்புடவையா ?

மனைவி : எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கணவன் : இதுவரை நான் துவைக்காத புடவையா இருக்கே!
===============
டாக்டர் : நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!

அதுக்காக மீதிப் பணத்துக்குப் பதிலா இன்னொரு வைட்டமின் ஊசி போட்டுக்கச் சொல்றது நல்லா இல்லீங்க டாக்டர்!
=================
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பு !

ஏன்?

மகளிர் அணியில யாரைப் பார்த்தாலும் ஜூரம்
அடிக்குதான்னு தொட்டு தொட்டு பார்க்கிறாரே!
==================
கோவத்துல் என் மனைவி என்னை அடிக்க வந்தப்ப, ஒண்ணு கொடுத்தேன் பாரு, அப்படியே அசந்துட்டா!

அடியா கொடுத்தே?

அரைப் பவுன் மோதிரத்தை!
=============
சுத்தம் சோறு போடும்....

அப்போ..இடைத்தேர்தல்..?

பிரியாணி போடும்!
==============
கணவன் : எங்கம்மா எது வாங்கினாலும் வாயில் போட்டுப் பார்த்துதான் வாங்குவாங்க!

மனைவி : அப்போ கொஞ்சம் எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க!
==========
நீதிபதி; ஜவுளிக்ககடையில் சேலை திருடிய பெண்ணுக்கு ரூ 5000 அபராதம்…விதிக்கிறேன்.... திருடியவர் ஏழை..என்பதாலும்..மாசம் ஆடி என்பதாலும்...ஆடித்தள்ளுபடி போக
ரூ 3000 செலுத்தினால் போதுமென தீர்ப்பு
கூறுகிறேன் .!
=============
டாக்டர், நர்ஸ் பண்றது நல்லா இல்ல!

என்ன?

நான் ஆபரேஷன்ல பிழைப்பேனா மாட்டேனான்னு
இன்னொரு நர்ஸ்கிட்டே பெட் கட்டுறாங்க!
===============
தலைவருக்கு கொழுப்பு அதிகம்னு டாக்டர் சொல்லிட்டாராம்!

இதுக்கு ஏன் அவர் டாக்டர்கிட்டே போகணும்?
நமக்கே தெரியுமே!
===================
தலைவரே, அண்ணா சாலைல பயங்கர டிராஃபிக் ஜாம்!

அதை ஏன் கிட்டே வந்து சொல்றே?

கூட்டம் உள்ள இடத்துல பேசணும்னு நீங்கதானே
ஆசைப்பட்டிங்க!
===================

காலேஜிலே படிக்கிற ஹீரோ நிறைய அரியர்ஸ்
வெச்சிருக்காரு!

அப்ப, படத்துக்கு மக்குபாய் – னு டைடில் வெச்சிடலாம்!
============
ஜவுளிக் கடை மாடியிலேர்ந்து ஏம்மா குதிச்சு தற்கொலைமுயற்சி பண்ண?

எவ்வளவு தேடியும் மேட்சிங் பிளவுஸ் கிடைக்கலை!
=============
எதுவா இருந்தாலும் இரண்டு மணி நேரம் கழிச்சிதான்
சொல்ல முடியும்!

நிலைமை அவ்வளவு மோசமா டாக்டர்?

நீங்கதானே ‘பணம் கட்ட இரண்டு மணி நேரம் ஆகும்’ னு
சொன்னீங்க!
=============
என்னப்பா! பேப்பர் மசாவுல ரெண்டு ஓட்டை போட்டிருக்கு!

ஃபைல் பண்ணி வச்சிருந்தோம் சார், அதான்!
==============
பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம் ‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி தள்ளியே நிப்பானுங்க!!!
==============
மேடைல பேசிட்டு வந்ததும் நான் தண்ணி
அடிக்கறதைப் பத்தி என்ன நினைக்கிறே?

எல்லாரும் குடிச்சிட்டு உளறுவாங்க, நீங்க உளறிட்டு
குடிக்கறீங்க, தலைவரே!

என்..வீட்டு காரருதான்...

நிருபர் : ஏம்மா..வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்...

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க,என்..வீட்டு காரருதான்.. குடிச்சுட்டு வந்திருக்கார்னு நினைச்சுதான்....அந்த வெளு...வெளுத்தேன்....

கம்பராமாயணத்தை எழுதியது யார்டா?

வாத்தியார்: கம்பராமாயணத்தை எழுதியது யார்டா? கேள்விலேயே பதில் இருக்கு!
பையன்: ராமர் சார்!
வாத்தியார்: கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
பையன்: அப்போ கிருஷ்ணர் சார்!
வாத்தியார்: அட ராமா!
பையன்: அப்ப...கண்டிப்பா ராமர்தான் சார்!

வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."

(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)



கணவன்: அன்பே, வந்துட்டேன்

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?

கணவன்: BAD COMMAND OR FILE NAME.

மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?

கணவன்: ABORT,RETRY,IGNORE.

மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?

கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.

மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.

கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.

மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.

கணவன்: DATA TYPE MISMATCH.

மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.

கணவன்: BY DEFAULT.

மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?

கணவன்: HARD DISK FULL.

மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?

கணவன்: UNKNOWN VIRUS DETECTED.

மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?

கணவன்: TOO MANY PARAMETERS.

மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.

கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.

மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!

கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.

மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.

கணவன்: SHUT DOWN THE COMPUTER.

மனைவி: நான் போறேன்.

கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

திருடன்

ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.

அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. அவன் வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.

அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.

மந்திரி,

"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன் என்றார்

அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.

இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

அப்பவே நம்ம மந்த்ரிங்க எல்லாம் அப்படித்தான் போல

Wednesday, February 25, 2015

ஜல்லிக்கட்டு காளையை அடக்கியவர்...!

அதோ போறாரே...அவர் ஜல்லிக்கட்டு காளையை 
அடக்கியவர்...! 

அப்போ ரொம்ப தைரியசாலின்னு சொல்லுங்க..! 

ஆனா, அவரால அவர் மனைவியை அடக்க முடியலே..!

டெட்டால் சோப்பு இருக்கா..?

அண்ணாச்சி கடையிலே டெட்டால்
சோப்பு இருக்கா..?
இருக்குங்க..!!
ஒரிஜினல் தானா..??
ஆமாங்க.
உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்..??
மினரல் வாட்டர்
இருக்கா..??
இருக்குங்க..!!
ஒரிஜினல் தானா..??
ஆமாங்க..!!
அப்போ உங்க
கையை டெட்டால்
சோப்பு
போட்டு மினரல்
வாட்டர்லே கழுவிட்டு,
எனக்கு 100 கிராம்
புளி குடுங்கண்ணே...!
!!
அடிங்கொய்யால.....!!!

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்... !!

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
*********************************************
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
*********************************************
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன்
என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
*********************************************
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
*********************************************
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
*********************************************
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
*********************************************
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
*********************************************
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
*********************************************
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
*********************************************
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
*********************************************
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
*********************************************
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
*********************************************
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
*********************************************
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
*********************************************
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
*********************************************
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
*********************************************
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
*********************************************
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
*********************************************
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
*********************************************
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
*********************************************

சிரிக்க மட்டும் ஹி,ஹி,ஹி .....!!

“காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?”
“பின்ன, பால்கடை வாசல்ல ‘இங்கு சுத்தீகரிக்கப்பட்ட
சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்’னு
எழுதியிருக்காங்களே!”
==================================
அப்பா: ராமு ஸ்கூல்ல உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?
ராமு: மணியடிக்கிற பியூனைத்தாம்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!!
==================================
ஆசிரியர்: சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!
மாணவன்: நாங்கள் படிப்பது சமச்சீர் கல்விதானே…
ஆசிரியர்: ஆம்…மாணவன்: பிறகு ஏன் மதிப்பெண்கள் ஏற்றத் தாழ்வுகளாக இருக்கின்றன?
==================================
என்ன வேணும் சார்?னு கேட்டிட்டுப் போன
சப்ளையர் ஒண்ணும் கொண்டு வரலையே?”
“அட எழவே! அவன் வேலையை விட்டுப் போயி
மூணு நாளாச்சே!
இன்னுமா இங்கே உக்கார்ந்திருக்கீங்க?”
===================================
“நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே,
எப்படி போவுது?”
“பொண்ணு, “தங்கச் சிலை” மாதிரி இருக்காள்ன்னு
வாய் தவறி சொல்லிட்டேன், இப்போ,
என் மாமனாரும், மாமியாரும், “செய்கூலி” வேணும்ன்னு
அடம் பிடிக்கிறாங்க..!
========================================
“கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத்
தேடிக்கிட்டிருக்கீங்க…?”
“இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்…ன்னு
நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே…அவங்களத்தான்
தேடிக்கிட்டிருக்கேன்
===========================================
“கபாலி…. நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு
சொன்னேனே…. ஏன் வரலை?”
“எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப்
போயிட்டேன் ஏட்டய்யா…!”
=============================================
ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும்
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.
இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
சிவப்பிந்தியஇளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.
வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்
இருக்கின்றன” என்று.
சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”
“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“அப்புறம்?”
“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு
நகர்ந்துள்ளது.”
“அப்புறம்?”
“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”
“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள் என்பது தெரியவில்லை உனக்கு..!?”?????????????
=========================================
.”என்னடா இது, பரீட்சையிலே 0 வாங்கிட்டு வந்திருக்கே?
ஒழுங்காப் படிக்கலியா?”
“ஐயோ, அது ஜீரோ இல்லைப்பா! நான் சூப்பரா படிக்கிறேன்னு
டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு “ஓ” போட்டிருக்காங்க!”
========================================
.”தினமும் புலம்புவீங்களே, இன்னிக்கு எப்படி, காஃபி
ஸ்ட்ராங்கா இருக்கா?”
“சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?”
“அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!”
=======================================
மனைவி: “உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’
சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே
இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என்
வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
================================================
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம்,
பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : “எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை”
பெண் : “அவசர‌ப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே”
================================================
பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”
வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.”
=================================================
“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”
“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”
=================================================
ஒருத்தி: “இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?”
மற்றவள்: “ஏன் கேட்குறே?”
முதலாமவள்: “என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்”
================================================
“யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு”
=============================================
=============================================
எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?
நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!
=============================================
ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே…?
நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க…!
=============================================
======================================
பெண் : ‘‘என்ன டாக்டர் சொல்றீங்க…
என் மாமியார் இறந்துட்டாங்களா?’’
டாக்டர் : ‘‘ஐயம் சாரி மேடம்… நா எவ்வளவோ
ட்ரை பண்ணினேன். பட் திஸ் இஸ் மெடிக்கல்
மிராக்கிள். பொழைச்சிக்கிட்டாங்க..
======================================
மகாராணி : ‘‘அரசே இளவரசர் சாப்பிடக்கூட வராமல்,
எந்நேரமும் வில்லு, சிலம்பாட்டம் என்றே இருக்கிறார்’’
அரசர் : ‘‘ஹி…ஹி…. அவனாவது எதிரியிடம்
புறமுதுகிடாமல் இருக்கட்டுமே’’
மகாராணி : ‘‘மண்ணாங்கட்டி… எந்நேரமும் வில்லு,
சிலம்பாட்டம்னு சினிமா பாத்து சீரழியுறார்னு சொல்ல
வந்தேன்’’
======================================