பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பேருந்துக்காக வெகு நேரமாய் காத்துக்கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு கோழி இருந்தது. பேருந்து வந்ததும் அவர் ஓடி சென்று பேருந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒரு இங்கிலாந்துகாரர் அமர்ந்திருந்தார். முதியவரைப் பார்த்ததும் அவர் லேசாக புன்னகைத்தார். பதிலுக்கு இவரும் புன்னகைத்தார். சிறிது நேரம் கழித்து அதே புன்சிரிப்புடன் அந்த இங்கிலாந்துக்காரர் கேட்டார் :ஹாய் வேர் ஆர் யு கோயிங்?........ ( where are u going?)
முதியவர் : (பையை ஒருமுறை பார்த்துவிட்டு ) வேற யாரோட கோழியும் இல்லங்க......இது என்னோட கோழி......
இங்கிலாந்துக்காரர் : (சிறிது அதிர்ச்சியுடன் ) வ்வாட்?..... (what?)
முதியவர் : (சிறிதும் அசராமல் ) வாத்து இல்லைங்க....இது கோழி.....
இங்கிலாந்துக்காரர்: ( மிகவும் கடுப்பாகி கோபத்துடன்) கெட் அவுட்......( get out..)
முதியவர் : ( மிகவும் அமைதியாக) கெட்ட அவுத்து விட்டா கோழி ஓடி போயிடும்ங்க....
இங்கிலாந்துக்காரர் : ?????!!!!

No comments:
Post a Comment