2011 ஆம் ஆண்டு தி.மு.க.,ஆட்சி இறுதியில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் 800 திருட்டுக்களும், இந்த ஆண்டு (2012) ஆம் ஆண்டு இரு மாதத்தில் என் ஆட்சியில் 729 திருட்டுக்களும் நடந்துள்ளது. அதாவது தி.மு.க.,ஆட்சியை விட என் ஆட்சியில் திருட்டு கொஞ்சம் குறைந்துள்ளது.
அதைப்போல் கடந்த ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் 153 கொலைகள் நடந்துள்ளது. ஆனால், என் ஆட்சியில் அதைவிட குறைவாக 123 கொலைகள் தான் நடந்துள்ளது என்று ஜெயலலிதா தி.மு.க.,ஆட்சியோடு தன் ஆட்சியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதைசொல்லவா இவரை முதலமைச்சராக தமிழக மக்கள் அமர்த்தினார்கள்?
ஒரு கடையில் ஒருவன் 1000 ரூபாய் திருடிவிட்டான் என்பதற்காக அவனை வேலையிலிருந்து நீக்குகிறார் முதலாளி. அதே வேலைக்கு வேறு ஒருவனை அமர்த்துகிறார். அவனும் 800 ரூபாய் திருடுகிறான். உடனே முதலாளி அவனிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு முன்பு திருடியவனை விட நான் கம்மியாகத்தானே திருடுகிறேன் என்று சொன்னானாம். அதுப்போல்தான் இருக்கிறது ஜெயலலிதா சொல்வதும்.
No comments:
Post a Comment