திரை
அரங்கிற்கு தன் நண்பர்களுடன் சென்ற ரமேஷ் தன் இருக்கையைக் கண்டுபிடித்து
உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து
விட்டார்.
மிதிபட்டவர் அவர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர் பார்த்தார்.அவரோ தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய ரமேஷ்க்கு தன் வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டார். இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.
உடனே ரமேஷ் தன் நண்பர்களிடம் சொன்னார்,''டேய்.... நாம உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.... வாங்கடா!''