Thursday, December 20, 2012

21-12-12 உலக அழிவை


நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் , சாவை ஆன‌ந்தமாய் கொண்டாடுங்கள்.

காலை 6 மணிக்கு

கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம் , சங்கு சண்முகம் குழுவினர் வழங்கும் ''அமங்கல இசை''

காலை 7 மணிக்கு

'' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழம் அறிவு மூலமாககணிக்கிறார்.

காலை 8 மணி

ஒரு சாவுக்கு எம்புட்டு வாங்குறீங்க ''மரண கானா விஜி'' யுடன் ஒரு கல கல பேட்டி .

காலை 9.30 மணிக்கு

உலக அழிவிற்க்கு பெரிதும் காரணம் ஆண்களா ? பெண்களா ?பேராசிரியர் சா(வு)லமன் பாப்பையா தலைமையில் தற்கொலை செய்துகொள்ள சிந்திக்க வைக்கும்சிறப்பு- பட்டி மன்றம்.

காலை 11 மணிக்கு

''பேய்புடிக்கலாம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி கொண்டிருப்பர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கொல கொலப்பான நிகழ்ச்சி .

நண்பகல் 12 மணிக்கு

இந்திய தொலைகாட்சி வர‌லாற்றில் திரைக்கு வந்து 10 , 15 வருடங்களான நாசர் , ரோஜா நடித்து திருட்டு வீசிடி களில் கூட வெளிவராத '' மாயன்'' திரைப்படம் கண்டு சாவுங்கள் .

மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழ் நாடு அரசு மற்றும் நத்தம் விஸ்வனாதன் குளுவினர் வழங்கும் ''பவர்கட்'' தமிழ்னாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சி .

21-12-12 உலக அழிவு திரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது '' *** டெத் கேர் '' உங்க சாவுக்கு நாங்க இருக்கோம்.

நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் ,
செத்துத் தொலையுங்கள்.

No comments:

Post a Comment