Saturday, April 19, 2014

நான் நம்பர மாத்திட்டேன்

ரொம்ப நாளாக நம்மாளு செல்போனுக்கு ஒரு ஆளு மிஸ்டு கால் கொடுத்து கலாய்த்துக் கொண்டே இருந்தார் .
இதுக்கொரு தீர்வு கட்டணும்னு நினச்சவர்.....
தன்னோட சிம் கார்டை மாத்திட்டு, அந்தாளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாரு...
"அடேய்.... என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... இப்போ நான் நம்பர மாத்திட்டேன்.இனிமே உன்னால ஒன்னும் பண்ண முடியாது".

நாய்

(தொலைபேசியில்) "டேய்...எங்கடா இருக்க?"
.
"வீட்லதான் மச்சான்,"
.
"அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு."
.
"ஏண்டா என்ன விஷயம்?"
.
"அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
ஒவ்வொரு ஃப்ரென்ட்ம் தேவை மச்சான்....

கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி



மச்சி ! என்னக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ரெண்டு பொம்பளைக என் பின்னாடியே அலையுறாங்கடா... தொல்ல தாங்க முடியல.... நீ தான் அவங்க கிட்டப் பேசி, " நம்ம தோஸ்த்து இப்பத்தான் வேலைக்குப் போயிருக்கான். கொஞ்சம் பேச்சுலர் லைப அனுபவிக்க விடுங்க அப்பறமாக் கல்யாணத்தப் பத்தி அவனே சொல்லுவான் ... சும்மாத் தொணதொணன்னு பின்னாடியே அலையாதீங்க" ன்னு சொல்லிப் புரிய வைக்கணும்டா"
ப்ரெண்ட் (மைண்ட் வாய்சுல " ஓம் பின்னாடியா? அதுவும் ரெண்டு பேரா? ஹி...ஹி...ஹி...) சொல்லு மாப்பு!... பேசிப் பாப்போம்... அவங்க எங்க இருக்காங்க?
மச்சி ! எங்க வீட்டுலையே தாண்டா இருக்காங்க....
மாப்பு! என்னடா சொல்லுற ? யாருடா அவங்க???
அது ... வந்து மச்சி ! என்னோட பாட்டியும் அம்மாவும் தாண்டா...
மச்சி: " அடச்சீ .... இதுக்குத் தான் இந்த பில்டப்பா???

அரசியல்வாதி



புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறிமுக விழாவிற்கு சென்றார் அந்த அரசியல்வாதி. நிகழ்ச்சி ஆரம்பித்தது. கம்ப்யூட்டர் விஞ்ஞானி பேசினார்.
" கணவான்களே ! இந்த கம்ப்யூட்டர் ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. இதனை கையாளுபவர்களின் குணாதிசயங்களை வைத்து அவர்கள் யார் எனக் கூறி விடும். உதாரணத்திற்கு மருத்துவர் கையாண்டால் அவரின் அணுகு முறையை வைத்து அவர் டாக்டர் என்று கூறி விடும். இப்பொழுது சோதிப்பவர்கள் சோதிக்கலாம்"
முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்த அரசியல்வாதி படாரென எழுந்தார். அனைத்தும் தெரிந்தவராக தன்னை காட்டிக் கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம். கம்பீரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் எழுப்பியது. தன்னை மாபெரும் அரசியல்வாதி என கம்ப்யூட்டர் சொல்லப் போவதைக் காணும் ஆவலில் இயக்கி முடித்தார்.
கம்ப்யூட்டர் அவரைப் பற்றிய தனது கணிப்பை வெளியிட்டது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வாய் விட்டுப் படித்தார்.
கணிப்பு:-
Intel inside. Mental outside.