புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறிமுக விழாவிற்கு சென்றார் அந்த அரசியல்வாதி. நிகழ்ச்சி ஆரம்பித்தது. கம்ப்யூட்டர் விஞ்ஞானி பேசினார்.
" கணவான்களே ! இந்த கம்ப்யூட்டர் ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. இதனை கையாளுபவர்களின் குணாதிசயங்களை வைத்து அவர்கள் யார் எனக் கூறி விடும். உதாரணத்திற்கு மருத்துவர் கையாண்டால் அவரின் அணுகு முறையை வைத்து அவர் டாக்டர் என்று கூறி விடும். இப்பொழுது சோதிப்பவர்கள் சோதிக்கலாம்"
முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்த அரசியல்வாதி படாரென எழுந்தார். அனைத்தும் தெரிந்தவராக தன்னை காட்டிக் கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம். கம்பீரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் எழுப்பியது. தன்னை மாபெரும் அரசியல்வாதி என கம்ப்யூட்டர் சொல்லப் போவதைக் காணும் ஆவலில் இயக்கி முடித்தார்.
கம்ப்யூட்டர் அவரைப் பற்றிய தனது கணிப்பை வெளியிட்டது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வாய் விட்டுப் படித்தார்.
கணிப்பு:-
Intel inside. Mental outside.
Intel inside. Mental outside.
No comments:
Post a Comment