Wednesday, February 25, 2015

ஜல்லிக்கட்டு காளையை அடக்கியவர்...!

அதோ போறாரே...அவர் ஜல்லிக்கட்டு காளையை 
அடக்கியவர்...! 

அப்போ ரொம்ப தைரியசாலின்னு சொல்லுங்க..! 

ஆனா, அவரால அவர் மனைவியை அடக்க முடியலே..!

டெட்டால் சோப்பு இருக்கா..?

அண்ணாச்சி கடையிலே டெட்டால்
சோப்பு இருக்கா..?
இருக்குங்க..!!
ஒரிஜினல் தானா..??
ஆமாங்க.
உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்..??
மினரல் வாட்டர்
இருக்கா..??
இருக்குங்க..!!
ஒரிஜினல் தானா..??
ஆமாங்க..!!
அப்போ உங்க
கையை டெட்டால்
சோப்பு
போட்டு மினரல்
வாட்டர்லே கழுவிட்டு,
எனக்கு 100 கிராம்
புளி குடுங்கண்ணே...!
!!
அடிங்கொய்யால.....!!!

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்... !!

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
*********************************************
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
*********************************************
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன்
என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
*********************************************
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
*********************************************
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
*********************************************
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
*********************************************
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
*********************************************
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
*********************************************
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
*********************************************
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
*********************************************
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
*********************************************
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
*********************************************
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
*********************************************
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
*********************************************
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
*********************************************
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
*********************************************
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
*********************************************
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
*********************************************
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
*********************************************
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
*********************************************

சிரிக்க மட்டும் ஹி,ஹி,ஹி .....!!

“காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?”
“பின்ன, பால்கடை வாசல்ல ‘இங்கு சுத்தீகரிக்கப்பட்ட
சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்’னு
எழுதியிருக்காங்களே!”
==================================
அப்பா: ராமு ஸ்கூல்ல உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?
ராமு: மணியடிக்கிற பியூனைத்தாம்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!!
==================================
ஆசிரியர்: சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!
மாணவன்: நாங்கள் படிப்பது சமச்சீர் கல்விதானே…
ஆசிரியர்: ஆம்…மாணவன்: பிறகு ஏன் மதிப்பெண்கள் ஏற்றத் தாழ்வுகளாக இருக்கின்றன?
==================================
என்ன வேணும் சார்?னு கேட்டிட்டுப் போன
சப்ளையர் ஒண்ணும் கொண்டு வரலையே?”
“அட எழவே! அவன் வேலையை விட்டுப் போயி
மூணு நாளாச்சே!
இன்னுமா இங்கே உக்கார்ந்திருக்கீங்க?”
===================================
“நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே,
எப்படி போவுது?”
“பொண்ணு, “தங்கச் சிலை” மாதிரி இருக்காள்ன்னு
வாய் தவறி சொல்லிட்டேன், இப்போ,
என் மாமனாரும், மாமியாரும், “செய்கூலி” வேணும்ன்னு
அடம் பிடிக்கிறாங்க..!
========================================
“கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத்
தேடிக்கிட்டிருக்கீங்க…?”
“இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்…ன்னு
நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே…அவங்களத்தான்
தேடிக்கிட்டிருக்கேன்
===========================================
“கபாலி…. நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு
சொன்னேனே…. ஏன் வரலை?”
“எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப்
போயிட்டேன் ஏட்டய்யா…!”
=============================================
ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும்
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.
இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
சிவப்பிந்தியஇளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.
வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்
இருக்கின்றன” என்று.
சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”
“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“அப்புறம்?”
“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு
நகர்ந்துள்ளது.”
“அப்புறம்?”
“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”
“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள் என்பது தெரியவில்லை உனக்கு..!?”?????????????
=========================================
.”என்னடா இது, பரீட்சையிலே 0 வாங்கிட்டு வந்திருக்கே?
ஒழுங்காப் படிக்கலியா?”
“ஐயோ, அது ஜீரோ இல்லைப்பா! நான் சூப்பரா படிக்கிறேன்னு
டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு “ஓ” போட்டிருக்காங்க!”
========================================
.”தினமும் புலம்புவீங்களே, இன்னிக்கு எப்படி, காஃபி
ஸ்ட்ராங்கா இருக்கா?”
“சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?”
“அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!”
=======================================
மனைவி: “உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’
சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே
இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என்
வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
================================================
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம்,
பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : “எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை”
பெண் : “அவசர‌ப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே”
================================================
பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”
வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.”
=================================================
“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”
“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”
=================================================
ஒருத்தி: “இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?”
மற்றவள்: “ஏன் கேட்குறே?”
முதலாமவள்: “என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்”
================================================
“யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு”
=============================================
=============================================
எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?
நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!
=============================================
ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே…?
நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க…!
=============================================
======================================
பெண் : ‘‘என்ன டாக்டர் சொல்றீங்க…
என் மாமியார் இறந்துட்டாங்களா?’’
டாக்டர் : ‘‘ஐயம் சாரி மேடம்… நா எவ்வளவோ
ட்ரை பண்ணினேன். பட் திஸ் இஸ் மெடிக்கல்
மிராக்கிள். பொழைச்சிக்கிட்டாங்க..
======================================
மகாராணி : ‘‘அரசே இளவரசர் சாப்பிடக்கூட வராமல்,
எந்நேரமும் வில்லு, சிலம்பாட்டம் என்றே இருக்கிறார்’’
அரசர் : ‘‘ஹி…ஹி…. அவனாவது எதிரியிடம்
புறமுதுகிடாமல் இருக்கட்டுமே’’
மகாராணி : ‘‘மண்ணாங்கட்டி… எந்நேரமும் வில்லு,
சிலம்பாட்டம்னு சினிமா பாத்து சீரழியுறார்னு சொல்ல
வந்தேன்’’
======================================

வாண்டு பாபு

டீச்சர்: பாபு,
கண்ணை மூடி சாமி கும்பிட்டியே...
என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த
பள்ளிக்கூடத்துல
எல்லா வகுப்புகளுக்கும்
நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன
்.
டீச்சர்:
உன்னை மாதிரி மாணவன்
கிடைக்க நான்
கொடுத்து வச்சிருக்கணும்.
சரி எதுக்காக
இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம்
எல்லாரும்
பெறட்டுமேன்னு தான்!
******************************
********************
டீச்சர்: இந்தப் பறவையோட
காலைப்
பார்த்து இது என்ன
பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்"
வாண்டு பாபு:
"தெரியலை"
டீச்சர்: "இது தெரியலியா?
நீயெல்லாம்
உருப்படவா போற!! உன்
பேரு என்னடா?"
வாண்டு: "என் காலைப்
பார்த்து நீங்களே கண்டுபிடிங்க
பார்ப்போம்!!"
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர் : விலங்குகளின்
கண்களுக்கு அதிக
சக்தி உள்ளது என்று எப்படிச்
சொல்கிறாய் பாபு?
வாண்டு பாபு :
அதுங்கதான்
கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்!
டீச்சர்: ???
******************************
********************
கணக்கு டீச்சர்: பாபு,
உன்கிட்ட முதல்ல 2 முயல்
தர்றேன், அப்புறம் 2 முயல்
தர்றேன், கடைசியா 2
முயல் தர்றேன்.
இப்போ உன்கிட்ட
எத்தனை முயல் இருக்கும்?
வாண்டு பாபு: 7 முயல்
இருக்கும் டீச்சர்!
டீச்சர்: என்ன? நல்லா கூட்டிப்
பாரு 6 முயல் இருக்கும்.
பாபு: இல்ல டீச்சர், 7 முயல்
இருக்கும்!
டீச்சர்: எனக்கு கோபம்
வருது பாபு... எப்படி 7
இருக்கும்?
பாபு: எங்க வீட்ல
ஏற்கனவே ஒரு முயல்
இருக்கு. நீங்க கொடுக்குற
6 முயலோட அதையும்
சேர்த்தா 7
தானே இருக்கும்....!
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர்: டேய் பாபு..
டீச்சர்னு மரியாதை இல்லாம
என் மேல சைக்கிளால
மோதுன?
வாண்டு பாபு: பிரேக்
புடிக்கல சார்
ஆசிரியர்: பிரேக்
புடிக்குதே...
வாண்டு: பிரேக்கை நான்
புடிக்கல சார்!
ஆசிரியர்:???
******************************
********************
டீச்சர்: படிச்சு முடிச்சதும்
என்ன செய்யலாம்னு இருக்க
பாபு?
வாண்டு பாபு:
புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர்: நியூட்டன்
ஒரு மரத்தடியில்
உட்கார்ந்திருக்
கும்போது, அவர்
தலையில் ஒரு ஆப்பிள்
விழுந்தது. அவர்
புவியீர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன
தெரிகிறது?
வாண்டு பாபு:
இப்படி வகுப்பறையில
உட்கார்ந்துக்கி
ட்டு புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு
இருந்தா ஒன்னும்
கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது.
ஆசிரியர்:???

கொஞ்சம் சிரிங்க பாஸ்........

”இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர்
கால்..ல.. விழுந்து மன்னிப்புக் கேட்டாரு”
“”அப்புறம்?”
"“என் கொலுசைக் காணோம்”
##############################
உங்க தாத்தா ஏன் கோபமா இருக்கார்?
அவரோட கனவுக்கன்னி, கட்சியிலே சேர்ந்துட்டதால
ஒரு வகைல அவருக்கு உடன் பிறப்பு ஆயிட்டாங்களாம்…!
###################################
உங்களை இப்படி ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிட்டு ,
உங்க மனைவி ஏன் தலைமறைவாயிட்டாங்க..?
அவ ரொம்ப பயந்த சுபாவம் இன்ஸ்பெக்டர்..!
########################################
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . .
########################################
“சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு
அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?”
“படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும்
தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்”
########################################
“”வேலை முடிஞ்சு இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீயே…
வீட்டில் மனைவி திட்டமாட்டாங்களா? ”
“”எனக்குத்தான் கல்யாணமே ஆகலையே?”
“”அப்புறம் ஏன் லேட்டாப் போகிறே?”
########################################
பெண்களுக்கே இங்கு சமாதானங்கள் தேவைப்படுகிறது....
ஆண்கள் என்னைக்கு கோச்சுக்கிறாங்க...
கோச்சுக்கிட்டா மட்டும் யார் சமாதான படுத்த வராய்ங்க...
அவங்கள அவங்களே சமாதானப்படுத்திக்கினாதான் உண்டு.
########################################
மன்னர், மகாராணியைக் கடத்தும்போது சும்மாவா
இருந்தார்..?
யார் சொன்னது கடத்தியவன் காலைத் தொட்டு
வணங்கி விட்டல்லவா வந்தார்…!
########################################
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு...
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
########################################
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
.
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
########################################
கமலா, அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே..?
உடம்பு முடியலைனு சொன்னதும், ஆட்டோ வெச்சு
அக்கறையா என் மருமகள் அவரிடம் கூட்டிப்
போனாளே…!
########################################
எதுனா போட்டுக் கொடுங்க சார்..!
நேத்து உன் பொண்டாட்டியை சினிமா
தியேட்டர்ல பார்த்தேன், கூட யாரோ ஒரு
தடிப்பையன் வந்திருந்தான், போதுமா..!

டாக்டர் ராக்ஸ்

டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
###################################
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
##############################
நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
###################################
நோயாளி : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
###################################
நோயாளி : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
நோயாளி : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
###################################
ஆண் டாக்டர்: வாசலில் எதுக்கு போலீஸ் வந்திருக்கு?
பெண் டாக்டர்: பாலி கிளினிக்குனு எழுதறதுக்குப் பதிலா பெயிண்டர் போலி கிளினிக்குனு எழுதி தொலைச்சிட்டான்
###################################
ஒருவர்„ ……அந்தப் போலிடாக்டர், முதல்லே ஓர்க்ஷhப் வைத்திருந்தவர்ன்னு நெனைக்கறேன்
மற்றெhருவர்„ ……தலை சுற்றல்†ன்ன சொன்னதற்கு... ஒரு போல்ட்டைப் போட்டு டைட் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரே
##############################
டாக்டர்„ கண் இமை இவ்வளவு பொpசா வீங்கியிருக்கே எறும்பு கடிச்சிட்டுன்னு சொல்றீங்களே அது கடிக்கிறவரைக்கும் எதைப் பார்த்துக்கிட்டு இருந்தீங்க?
வந்தவர்„ ஜன்னல் வழியா அடுத்த வீட்டுப் பெண்ணை டாக்டர்.
##############################
டாக்டர்„ யோவ், நான் உனக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன..?
நோயாளி„ இந்த ஆபரேஷன் முடிந்து ஒருவேளை உயிர் பிழைத்து வந்தால் என் அபிப்ராயத்தை நிச்சயம் சொல்றேன்.
டாக்டர்„ ---?

உங்களுக்கு தெரியல..

கணவன்;- நேத்து ராத்திரி.. நான் குடிச்சிட்டு வந்தப்போ.. நீ பேசிய வார்த்தை ஒவ்வொன்னும் என்னை செருப்பால அடிச்சது போல இருந்துச்சு..!!
மனைவி;- அடப் போங்க.. குடிச்சியிருந்ததால.. உங்களுக்கு தெரியல.. நெசமாவே நான் செருப்பால தான் அடிச்சேன்..!!
???

Tuesday, February 24, 2015

பிரமாண்டமாதான் இருக்கும்

"சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன்
எடுக்கச் சொல்றாங்க".?..
"என்னோட ட்ரீட்மென்ட் எல்லாமே பிரமாண்டமாதான்
இருக்கும்"...!

மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்


ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.
®
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)்

மலை ரயிலில் இருவர் :


எஞ்சின் டிரைவருக்கு போதிய அனுபவம் இல்லைன்னு நெனைக்கிறேன்.
எதை வச்சு சொல்லறே ?
வரும் போது, நேராத்தான் ஓட்டிட்டு வந்தார். திரும்பும் போது வண்டியை திருப்பி நேரா ஒட்டாமே, ரிவர்சிலேயே ஓட்டிட்டு வரார். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் விடுமோ ?

ஒரு இந்திய டாக்டர் ....

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார்.
கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார். உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) :
டாக்டர் அது சிறுநீர் என்றார்.
டாக்டர் :
அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்..