Wednesday, February 25, 2015

டாக்டர் ராக்ஸ்

டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
###################################
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
##############################
நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
###################################
நோயாளி : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
###################################
நோயாளி : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
நோயாளி : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
###################################
ஆண் டாக்டர்: வாசலில் எதுக்கு போலீஸ் வந்திருக்கு?
பெண் டாக்டர்: பாலி கிளினிக்குனு எழுதறதுக்குப் பதிலா பெயிண்டர் போலி கிளினிக்குனு எழுதி தொலைச்சிட்டான்
###################################
ஒருவர்„ ……அந்தப் போலிடாக்டர், முதல்லே ஓர்க்ஷhப் வைத்திருந்தவர்ன்னு நெனைக்கறேன்
மற்றெhருவர்„ ……தலை சுற்றல்†ன்ன சொன்னதற்கு... ஒரு போல்ட்டைப் போட்டு டைட் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரே
##############################
டாக்டர்„ கண் இமை இவ்வளவு பொpசா வீங்கியிருக்கே எறும்பு கடிச்சிட்டுன்னு சொல்றீங்களே அது கடிக்கிறவரைக்கும் எதைப் பார்த்துக்கிட்டு இருந்தீங்க?
வந்தவர்„ ஜன்னல் வழியா அடுத்த வீட்டுப் பெண்ணை டாக்டர்.
##############################
டாக்டர்„ யோவ், நான் உனக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன..?
நோயாளி„ இந்த ஆபரேஷன் முடிந்து ஒருவேளை உயிர் பிழைத்து வந்தால் என் அபிப்ராயத்தை நிச்சயம் சொல்றேன்.
டாக்டர்„ ---?

No comments:

Post a Comment