Friday, March 15, 2013

பவர் ஸ்டார்

* ஒரு நாள் பவர் ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

* பவர் ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடம் இருந்து வந்திருந்தன.

* பவர் ஸ்டார்ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

* ஒருமுறை பவர் ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர் ஸ்டார் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

* பவர் ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்....

No comments:

Post a Comment