ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு.
மாணவன்: இது நல்லாயிருக்கே, நீங்க தூங்க வைப்பீங்க.. நான் எழுப்பனுமா?
==============
டாலரைப் பணமா மாற்றும் இடத்தில் நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..எப்படி?
கழுத்துல போட்டிருந்த முருகர், விநாயகர் டாலரைக் கொடுத்து பணம் கேட்டுத் தொலைச்சுட்டார்..!
====================
ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
===============
நாய் துரத்தற மாதிரி கனவு வருது டாக்டர்!
மூணு நாலு கல்லைக் கையிலே வெச்சுக்கிட்டு
தூங்குங்க!
=============
தம்பி...இந்த சோப்பு டப்பாலே சின்ன சின்ன ஓட்டை எதுக்கு இருக்கு தெரியுமா?..
ஓட்டை பெரிசா இருந்தா சோப்பு கிழே விழுந்துரும் அதனாலே தான்...இது கூட தெர்லே...
============
தலைவர் ரொம்ப புகழ்ச்சி எதிர்பார்ப்பாரு…!
எப்படிச் சொல்றே?
தன்னை, ‘விடிவெள்ளி’ன்னு கோஷம் போட்ட தொண்டரைக் கூப்பிட்டு கண்டிச்சு, ‘விடிதங்கம்‘ன்னு கோஷம் போட சொல்றாரு..!
==========
தலைவர் பதவியே போயிடுச்சே…இனி என்ன செய்ய போறீங்க?
எனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை வச்சு, மருத்துவம்
செய்து பொழைச்சுக்குவேன்…!
================
என்ன சொல்றே ராம்குமார், ‘ஏட்டும் சேட்டும்' உன்
வாழ்க்கையில் ரெண்டு கண்கள் ‘ மாதிரியா?
திருட வேண்டிய இடத்தை ஏட்டு சொன்னா, திருடிய
பொருளை சேட்டு வாங்கிக்கிறாரே!
================
ச்சே.. வாய் பேச முடியாதவக்கிட்ட கூட இந்த போலீஸ்காரர் மாமூல்
வாங்கியிருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?
உள்ளங்கையில் நூறுன்னு எழுதியிருக்கார் பாரு…!
==========
செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து
நீக்கிட்டாரு?
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிய செலவுன்னு மெடிக்கல்
பில் வெச்சு லட்சங்கள் பல சுருட்டிட்டாராம்!
=========
சார், இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி
அப்போ..வித்தியாசமா...இருக்கே...இது...?
இது…?சண்டைக்கரண்டி!!
=============
என் சம்பளத்தை உயர்த்தணும்
ஸாரி..அது மட்டும் முடியாது, வேற என்ன வேணாலும்
கேளுங்க!
ஒ கே , மாசம் இரண்டு தடவை சம்பளம் கொடுத்திடுங்க!
===============
என்னது நம்ம கட்சிக் கொடியில் அடிக்கடி சின்னத்தை
மாத்தணுமா ?
ஆமாம் தலைவா! புதுசா வீச்சருவா சின்னத்தைப்
போட்டாத்தான் எதிர்க் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம்
பயம் வரும்!
===============
கணவன் : இது உன் புதுப்புடவையா ?
மனைவி : எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
கணவன் : இதுவரை நான் துவைக்காத புடவையா இருக்கே!
===============
டாக்டர் : நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!
அதுக்காக மீதிப் பணத்துக்குப் பதிலா இன்னொரு வைட்டமின் ஊசி போட்டுக்கச் சொல்றது நல்லா இல்லீங்க டாக்டர்!
=================
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பு !
ஏன்?
மகளிர் அணியில யாரைப் பார்த்தாலும் ஜூரம்
அடிக்குதான்னு தொட்டு தொட்டு பார்க்கிறாரே!
==================
கோவத்துல் என் மனைவி என்னை அடிக்க வந்தப்ப, ஒண்ணு கொடுத்தேன் பாரு, அப்படியே அசந்துட்டா!
அடியா கொடுத்தே?
அரைப் பவுன் மோதிரத்தை!
=============
சுத்தம் சோறு போடும்....
அப்போ..இடைத்தேர்தல்..?
பிரியாணி போடும்!
==============
கணவன் : எங்கம்மா எது வாங்கினாலும் வாயில் போட்டுப் பார்த்துதான் வாங்குவாங்க!
மனைவி : அப்போ கொஞ்சம் எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க!
==========
நீதிபதி; ஜவுளிக்ககடையில் சேலை திருடிய பெண்ணுக்கு ரூ 5000 அபராதம்…விதிக்கிறேன்.... திருடியவர் ஏழை..என்பதாலும்..மாசம் ஆடி என்பதாலும்...ஆடித்தள்ளுபடி போக
ரூ 3000 செலுத்தினால் போதுமென தீர்ப்பு
கூறுகிறேன் .!
=============
டாக்டர், நர்ஸ் பண்றது நல்லா இல்ல!
என்ன?
நான் ஆபரேஷன்ல பிழைப்பேனா மாட்டேனான்னு
இன்னொரு நர்ஸ்கிட்டே பெட் கட்டுறாங்க!
===============
தலைவருக்கு கொழுப்பு அதிகம்னு டாக்டர் சொல்லிட்டாராம்!
இதுக்கு ஏன் அவர் டாக்டர்கிட்டே போகணும்?
நமக்கே தெரியுமே!
===================
தலைவரே, அண்ணா சாலைல பயங்கர டிராஃபிக் ஜாம்!
அதை ஏன் கிட்டே வந்து சொல்றே?
கூட்டம் உள்ள இடத்துல பேசணும்னு நீங்கதானே
ஆசைப்பட்டிங்க!
===================
காலேஜிலே படிக்கிற ஹீரோ நிறைய அரியர்ஸ்
வெச்சிருக்காரு!
அப்ப, படத்துக்கு மக்குபாய் – னு டைடில் வெச்சிடலாம்!
============
ஜவுளிக் கடை மாடியிலேர்ந்து ஏம்மா குதிச்சு தற்கொலைமுயற்சி பண்ண?
எவ்வளவு தேடியும் மேட்சிங் பிளவுஸ் கிடைக்கலை!
=============
எதுவா இருந்தாலும் இரண்டு மணி நேரம் கழிச்சிதான்
சொல்ல முடியும்!
நிலைமை அவ்வளவு மோசமா டாக்டர்?
நீங்கதானே ‘பணம் கட்ட இரண்டு மணி நேரம் ஆகும்’ னு
சொன்னீங்க!
=============
என்னப்பா! பேப்பர் மசாவுல ரெண்டு ஓட்டை போட்டிருக்கு!
ஃபைல் பண்ணி வச்சிருந்தோம் சார், அதான்!
==============
பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம் ‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி தள்ளியே நிப்பானுங்க!!!
==============
மேடைல பேசிட்டு வந்ததும் நான் தண்ணி
அடிக்கறதைப் பத்தி என்ன நினைக்கிறே?
எல்லாரும் குடிச்சிட்டு உளறுவாங்க, நீங்க உளறிட்டு
குடிக்கறீங்க, தலைவரே!