Saturday, May 4, 2013

சரியான பதிலென்ன?

ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைய வேண்டுமென்றால்
பாதுகாவலன் ஒரு வினா எழுப்புவான்.

அந்த வினாவிற்கு சரியான பதில் சொன்னால்
உள்ளே அனுப்புவான். தவறாகச் சொன்னால்
தலையை வெட்டி விடுவான்.

அந்த கட்டிடத்தில் என்ன உள்ளது என்று அறிய துப்பறியும் நிபுணன் ஒருவன் விரும்பினான். எனவே பாதுகாவலன் என்ன கேள்வி கேட்பான் என அறிய
ஒளிந்திருந்து பார்வையிட்டான்.

அப்போது கட்டிடத்தில் நுழைய ஒருவன் வந்தான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '12' என்று சொன்னான். வந்தவனோ '6' என்றான். உள்ளே அவனை அனுப்பி விட்டான்.

அடுத்து ஒருவனிடம் '6' என்றான் வந்தவனோ '3'
என்றான். அவனையும் அனுப்பி விட்டான்.

உடனே துப்பறியும் நிபுணர் ஓ! இவ்வளவுதானா!
என நினைத்து இவன் சென்றான். அவனிடம்
பாதுகாவலன் ஆங்கிலத்தில் '10'
என்று சொன்னான்.

துப்பறியும் நிபுணர் '5' என்றார். பாதுகாவலன் இவர்
தலையை வெட்டி விட்டான். அப்போ! சரியான
பதிலென்ன?
 
count of letters in TWELVE= 6; SIX = 3;TEN =3. so ans is 3

No comments:

Post a Comment