ஹோட்டல் ஒன்றில் நானும் என் நண்பர் ஒருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இலையில் கொஞ்சம் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டு எழுந்துவிட்டார் அந்த நண்பர்.
ஏன் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டீர்...பிடிக்கலியா? என்றேன் நான்
இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட எச்சில் இலையை பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடுவர்கள் இல்லையா....அப்போது மிச்சமிருக்கும் சாப்பாட்டை ஏதாவது ஒரு நாய் சாப்பிடவரும்.....என்றார் நண்பர்.
ஓ.... நாயிக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்தில் மிச்சம் வச்சிட்டீங்க....அப்படித்தானே? என்று கேட்டேன் நான்
அதுதான் இல்லை. அப்படி நாய் சாப்பிட வரும்போது நாம் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு இலையை சுத்தமாக வைத்திருந்தால் நாய் என்ன நினைக்கும்ன்னு தெரியுமா? என்று கேட்டார்.
என்ன நினைக்கும்? என்றேன் புரியாமல்....
இதுக்கு முன்னாடி இந்த இலையை எந்த நாய் நக்குச்சோன்னு நினைக்குமாம்....இதுக்கு முன்னாடி நம்ம தான அந்த இலையில் சாப்பிட்டோம்...எதுக்கு நாயிட்ட நாம நாயின்னு பேரு வாங்கனும்? அதான் கொஞ்சம் மிச்சம் வச்சுட்டேன் என்றார் நகைச்சுவையாக....
அதுசரி என்றேன் சிரித்துக்கொண்டே....
No comments:
Post a Comment