கொள்ளையர்கள் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு அனைத்து போன் ஒயர்களையும் துண்டித்துவிட்டு வங்கியின் உள்ளே நுழைந்தனர். உடனே அங்கிருக்கும் அனைவரையும் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கேஷியரிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் ஒரு சுவர் ஓரமாக பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
உடனே கொள்ளையர் தலைவன் “இங்கிருக்கும் அனைவரிடம் இருந்தும் செல்போன், நகை, பணத்தை பிடிங்கிக்கொள்ளுங்கள்” என்று ஆணையிட்டான்!
அப்போது யாருக்கும் தெரியாமல் அங்கு வேலை செய்யும் சர்தார்ஜி அந்த வங்கியின் மேனேஜரிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.
மேனேஜர் மெதுவாக "என்ன இது???”
சர்தார்ஜி சொன்னார், ”நான் உங்களுக்கு திருப்பி தரவேண்டிய கடன் 5000ருபாய் இதில் உள்ளது.”
No comments:
Post a Comment