Tuesday, December 27, 2011

வங்கிக் கொள்ளை - நகைச்சுவை

ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த இரண்டு கொள்ளையர்கள் உடனடியாக ஒரு கொள்ளையை அதே இரவில் நடத்தத் திட்டமிட்டனர். அவர்கள் தயாரித்த திட்டப்படி அந்த வங்கிக்குச் சென்றபோது திடீரென தெரு விளக்குகள் அணைந்துவிட்டது. ஒருவழியாக தேடிக்கண்டுபிடித்து வங்கியை அடைந்தனர். வங்கியின் உள்ளே பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்தனர். கேமராவிற்குச் செல்லும் ஒயரைத் துண்டித்தனர்.


பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க சேப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஒரு பத்து சேப்டி லாக்கர் மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய சேப்டி லாக்கர்கள் இருந்தன. அவர்களுக்கு ஒரே சந்தோசம். “இதை மட்டும் கொள்ளையடித்தால்போதும் வாழ்நாள் முழுதும் வேறு எதுவும் தேவை இல்லை” என்றான் ஒருவன்.



கொள்ளையர்கள் முதல் சேப்டி லாக்கரின் பூட்டை உடைத்தனர். உள்ளே கண்ணாடி பாட்டிலில் ஒரு வெண்ணிற பால் போன்ற திரவம் மட்டுமே இருந்தது. மீண்டும் அடுத்த சேப்டி லாக்கரின் பூட்டையும் உடைத்தனர், ஆனால் அதிலும் அதுவே இருந்தது. மேலும் பத்து சேப்டி லாக்கரை உடைத்தும் ஏமாற்றமே மிஞ்சியது.


கோபத்தில் அனைத்துக் கண்ணாடி பாட்டில்களையும் உடைத்தனர். அதன் வாசத்தால் அவர்களுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் உடனே அங்கிருந்து கிளம்பினர்.


அடுத்த நாள் செய்தித்தாள் தலைப்பு:


டெல்லியின் மிகப்பெரிய விந்தணுவங்கியில் கொள்ளை!...

No comments:

Post a Comment