Monday, August 26, 2013

அவை என்ன மிருகங்கள்..?

ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

No comments:

Post a Comment