Thursday, August 8, 2013

குரங்கு

ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார். 

ஒரு வீட்டில்,"கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்"என்று எழுதிய பலகை இருந்தது. அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.

வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,

"உங்களுக்கு என்ன வேண்டும்?"என்று கேட்டார். 

கிராமத்து ஆளும்,

"எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்"என்றார்.

வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது. அவர்,

"எனக்குத் தெரியும். இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?"என்றார்.

அதற்கு கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,

"அது பரவாயில்லை, இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!

No comments:

Post a Comment