Wednesday, September 4, 2013

எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?

கேபிள் டிவி நிறுவனத்துக்கு நம்ம நாராயணசாமி வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை.. முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..

மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்..” எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?”

அவர் “25 கம்பங்கள்” என்று பதிலளித்தார்..
நாராயணசாமிக் கேட்க, அவர் “5″ என்றார். முதலாளி வியப்படைந்து..

” என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?

” அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு… போய்ப் பாருங்க..!!

No comments:

Post a Comment