Tuesday, September 10, 2013

நான் தான் பேய்!!

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள் மனைவியானவள்.

பேய் போன்று, தன்னை உருவகப்படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

கணவன் (எந்தவிதப் பயமும் இன்றி) : யார் நீ

மனைவி: நான் தான் பேய்!!

கணவன்: ஓ அப்படியா.....

நல்லது என் கூட வீட்டுக்கு வா.....

உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன்......

மனைவி : அவள் தன் உண்மை நிலை உணர்ந்து மயக்கமுற்றாள்....

No comments:

Post a Comment