ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, 'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
No comments:
Post a Comment