Friday, November 8, 2013
ஆடி
நீதிபதி; ஜவுளிக்ககடையில் சேலை திருடிய பெண்ணுக்கு ரூ 5000 அபராதம்…விதிக்கிறேன்.... திருடியவர் ஏழை..என்பதாலும்..மாசம் ஆடி என்பதாலும்...ஆடித்தள்ளுபடி போக
எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க
கணவன் : எங்கம்மா எது வாங்கினாலும் வாயில் போட்டுப் பார்த்துதான் வாங்குவாங்க!
மனைவி : அப்போ கொஞ்சம் எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க!
அடியா கொடுத்தே?
கோவத்துல் என் மனைவி என்னை அடிக்க வந்தப்ப, ஒண்ணு கொடுத்தேன் பாரு, அப்படியே அசந்துட்டா!
அடியா கொடுத்தே?
அரைப் பவுன் மோதிரத்தை!
ஏன்?
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பு !
ஏன்?
மகளிர் அணியில யாரைப் பார்த்தாலும் ஜூரம்
அடிக்குதான்னு தொட்டு தொட்டு பார்க்கிறாரே!
நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!
டாக்டர் : நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!
அதுக்காக மீதிப் பணத்துக்குப் பதிலா இன்னொரு வைட்டமின் ஊசி போட்டுக்கச் சொல்றது நல்லா இல்லீங்க டாக்டர்!
எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
கணவன் : இது உன் புதுப்புடவையா ?
மனைவி : எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
கணவன் : இதுவரை நான் துவைக்காத புடவையா இருக்கே!
பயம் வரும்!
என்னது நம்ம கட்சிக் கொடியில் அடிக்கடி சின்னத்தை
மாத்தணுமா ?
ஆமாம் தலைவா! புதுசா வீச்சருவா சின்னத்தைப்
போட்டாத்தான் எதிர்க் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம்
பயம் வரும்!
என் சம்பளத்தை உயர்த்தணும்
என் சம்பளத்தை உயர்த்தணும்
ஸாரி..அது மட்டும் முடியாது, வேற என்ன வேணாலும்
கேளுங்க!
ஒ கே , மாசம் இரண்டு தடவை சம்பளம் கொடுத்திடுங்க!
இது…?சண்டைக்கரண்டி!!
சார், இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி
அப்போ..வித்தியாசமா...இருக்கே.. .இது...?
இது…?சண்டைக்கரண்டி!!
செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு?
செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து
நீக்கிட்டாரு?
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிய செலவுன்னு மெடிக்கல்
பில் வெச்சு லட்சங்கள் பல சுருட்டிட்டாராம்!
நூறு
ச்சே.. வாய் பேச முடியாதவக்கிட்ட கூட இந்த போலீஸ்காரர் மாமூல்
வாங்கியிருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?
உள்ளங்கையில் நூறுன்னு எழுதியிருக்கார் பாரு…!
ஏட்டும் சேட்டும்
என்ன சொல்றே ராம்குமார், ‘ஏட்டும் சேட்டும்' உன்
வாழ்க்கையில் ரெண்டு கண்கள் ‘ மாதிரியா?
திருட வேண்டிய இடத்தை ஏட்டு சொன்னா, திருடிய
பொருளை சேட்டு வாங்கிக்கிறாரே!
தலைவர் பதவியே போயிடுச்சே
தலைவர் பதவியே போயிடுச்சே…இனி என்ன செய்ய போறீங்க?
எனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை வச்சு, மருத்துவம்
செய்து பொழைச்சுக்குவேன்…!
எப்படிச் சொல்றே?
தலைவர் ரொம்ப புகழ்ச்சி எதிர்பார்ப்பாரு…!
எப்படிச் சொல்றே?
தன்னை, ‘விடிவெள்ளி’ன்னு கோஷம் போட்ட தொண்டரைக் கூப்பிட்டு கண்டிச்சு, ‘விடிதங்கம்‘ன்னு கோஷம் போட சொல்றாரு..!
சோப்பு டப்பாலே
தம்பி...இந்த சோப்பு டப்பாலே சின்ன சின்ன ஓட்டை எதுக்கு இருக்கு தெரியுமா?..
ஓட்டை பெரிசா இருந்தா சோப்பு கிழே விழுந்துரும் அதனாலே தான்...இது கூட தெர்லே...
ஆபரேஷன்
ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
த முருகர், விநாயகர் டாலரை
டாலரைப் பணமா மாற்றும் இடத்தில் நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..எப்படி?
கழுத்துல போட்டிருந்த முருகர், விநாயகர் டாலரைக் கொடுத்து பணம் கேட்டுத் தொலைச்சுட்டார்..!
இது நல்லாயிருக்கே,
ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு.
மாணவன்: இது நல்லாயிருக்கே, நீங்க தூங்க வைப்பீங்க.. நான் எழுப்பனுமா?
திருடன்
நிருபர் : ஏம்மா..வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன்
கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்...
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க,என்..வீட்டு காரருதான்..
குடிச்சுட்டு வந்திருக்கார்னு நினைச்சுதான்....அந்த வெளு...வெளுத்தேன்....
அட ராமா!
வாத்தியார்: கம்பராமாயணத்தை எழுதியது யார்டா? கேள்விலேயே பதில் இருக்கு!
பையன்: ராமர் சார்!
வாத்தியார்: கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
பையன்: அப்போ கிருஷ்ணர் சார்!
வாத்தியார்: அட ராமா!
பையன்: அப்ப...கண்டிப்பா ராமர்தான் சார்!
எப்படி இருப்பான்?"
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)
(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.
(உண்மை தானா...?)
காது கேட்காத தவளை
காது கேட்காத தவளை
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான
மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.
உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.
பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும்
எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய
முடிந்தது" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.
நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.
நம்ம மந்த்ரிங்க
ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.
அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. அவன் வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.
அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.
மந்திரி,
"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம்
எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன்
என்றார்
அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.
இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
அப்பவே நம்ம மந்த்ரிங்க எல்லாம் அப்படித்தான் போல
வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க
சில நிமிடங்கள் இன்பமாயிருக்க "தம்" அடிக்கலாம் !!!
சில மணி நேரம் இன்பமாயிருக்க "தண்ணி"
அடிக்கலாம் !!!
சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!
வாழ் நாள் முழுவதும்
இன்பமாயிருக்க இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !!!
பெரியப்பா
பெரியப்பாவிற்கு
முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும்''பாஸிடிவா''
பாருடா எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ''பாஸிடிவ்'' அம்சம்இருக்கும்.
அதிலே கவனம் வை நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.
''அரண்மனை
மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம்
இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடிமட்டத்தில்
இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத்
தான்கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய
விஷயம்'' என்றுஅண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும்
யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ? எனக்குச் சிறுவயதிலிருந்தே பெரியப்பா
ஹீரோ போலவே
தெரிந்தார்.
தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில்ஒரு
வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என
எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.
வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்துவருடங்களாக
இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன்சொன்ன
அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள்
கழித்துப்பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம்
ஆண்டில்படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர்
ஒருவர் ஹோட்டலில்மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச்
சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு
மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பைசென்ற பின் அவரை நேரில் பார்க்கச்
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலைவிஷயமாக மும்பை வந்த எனக்கு
அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம்
இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.
அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன்.
கதவைத்திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள்.
பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.
''பெரியப்பா இல்லையா?'' நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க
வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே
இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். ஆனால், பெரியம்மா அப்படிச்
சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளேபோனாள். அவர்கள் மகன் எங்கோ
வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும்விசாரித்தார்.
பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அரண்மனை போன்ற வீட்டில்
அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொருசூழ்நிலையில் பார்க்க எனக்கு
மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.அதைக் குரல் கம்ம
அவரிடம் சொல்லியே விட்டேன்.
பெரியப்பா அமைதியாகச் சொன்னார்.
''கையை விட்டுப் போனதைப் பற்றியேநினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை
உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப்படிக்கிற மகன் இருக்கான். எனக்கு
உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு.அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு
வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசுஇல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற
அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய
இருக்கு'' பெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம்
நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு
இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை!''
''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா
என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே!'' என்றுபுன்சிரிப்புடன்
என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக்
கொம்பிலிருந்த போதுஇருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல
மடங்கு உயர்ந்தே போனார்.நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான். ''ஆதலின்
நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம்
இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்இன்பமும் துன்பமும் மாறி
மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராகஇருந்தார் என்பதை
அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.
Monday, September 23, 2013
ஹா..ஹா..
வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
..
..
..
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்!
ஹா..ஹா..
பசங்க மேல தப்பில்லை.....!!
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம்...
மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”
ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….
“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார்..
மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”
இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….
“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,
ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க!”
# இப்போ காரணம் பிறியுதுங்களா
பசங்க மேல தப்பில்லை.....!!
What you want to become?
நான் ஸ்கூலில் படிக்கும்போது,
இங்கிலீஷ் டீச்சர் : What you want to become?(நீ என்னவாக விரும்புகிறாய்?)
நான் : I want to become a business man (நான் தொழிலதிபராக விரும்புகிறேன்)
டீச்சர்: அதுக்கு business man சொல்லக்கூடாது,அதற்கான சரியான சொல் entrepreneur.எங்க இப்ப சொல்லு?
நான்: இல்ல நான் பிசினெஸ் பண்ற ஐடியாவை விட்டுட்டேன்.
பூனை
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான். ஒரு நாள்
அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,
இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.
கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,'' போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை !
Rocket
மனைவி;- காரணம் இல்லாம
குடிக்கமாட்டேன்னு சொன்னீங்களே,
இப்போ ஏன் குடிச்சீங்க?????
கணவர்;- Rocket விடுறதுக்கு பாட்டில்
வேணும்னு பையன் கேட்டான் அதான்
மனைவி;-????????
புலி
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது, 'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
90 girls
If a man is allowed to select a girl
from 90 girls
.
and
.
.
Even if most beautiful is picked,
.
.
.
There's still the pain of losing
the remaining EIGHTY NINE
அடிப்பாவி..
ஒரு குடும்பம் ஊருக்குக் கிளம்பியது. மனைவி,பெட்டி,படுக்கை,பாத்திரங் கள் என்று ஏகப்பட்ட பொருட்களை தூக்கி வந்தாள்.
அவர்கள் ஒரு வழியாக புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
புகைவண்டியில் ஒரே கூட்டம். சாதாரணமாக ஏறுவதே கடினம் என்ற நிலையில் இவ்வளவு
பொருட்களுடன் எப்படி ஏறுவது?
கணவன் அப்போது கோபமாக ,''வீட்டிலுள்ள இரும்பு பீரோவையும் நீ தூக்கி வந்திருக்கலாம். அதை எப்படி வீட்டில் விட்டு வந்தாய்? என்றான்.
மனைவி அமைதியாக சொன்னாள் ,''நீங்க சொல்வதும் சரிதான். இரும்பு பீரோவையும் தூக்கி வந்திருக்கலாம்.
ஏனெனில் அதிதான் இன்றைய பிரயாணத்துக்கான டிக்கெட்டுகளை வைத்துள்ளேன்.''
அடிப்பாவி..
இறந்து விட்டான்
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்...!
Friday, September 13, 2013
யமஹா பைக்
நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக்
வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,
அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட
பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு...
அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு நெனச்சாரு,
"என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே" அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..
நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம
வேகத்த கொறச்சிகிட்டாறு...
ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்...
ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு
ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..
பார்த்தா நம்ம யமஹா பைக்வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..
அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து சொன்னான்,
"நான் தான் "முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா அப்படின்னு கேட்டானே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே"
வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,
அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட
பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு...
அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு நெனச்சாரு,
"என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே" அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..
நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம
வேகத்த கொறச்சிகிட்டாறு...
ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்...
ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு
ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..
பார்த்தா நம்ம யமஹா பைக்வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..
அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து சொன்னான்,
"நான் தான் "முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா அப்படின்னு கேட்டானே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே"
Wednesday, September 11, 2013
அதிசய டாக்டர்
ஒரு ஊர்ல ஒரு ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..
அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு..
நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி
” டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.
அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு..
அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு..
நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.
” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!
நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு..
இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி
” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு
இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.
என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.
.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.
. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான்.... நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே….!
Tuesday, September 10, 2013
நான் தான் பேய்!!
ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள் மனைவியானவள்.
பேய் போன்று, தன்னை உருவகப்படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.
கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.
கணவன் (எந்தவிதப் பயமும் இன்றி) : யார் நீ
மனைவி: நான் தான் பேய்!!
கணவன்: ஓ அப்படியா.....
நல்லது என் கூட வீட்டுக்கு வா.....
உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன்......
மனைவி : அவள் தன் உண்மை நிலை உணர்ந்து மயக்கமுற்றாள்....
பேய் போன்று, தன்னை உருவகப்படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.
கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.
கணவன் (எந்தவிதப் பயமும் இன்றி) : யார் நீ
மனைவி: நான் தான் பேய்!!
கணவன்: ஓ அப்படியா.....
நல்லது என் கூட வீட்டுக்கு வா.....
உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன்......
மனைவி : அவள் தன் உண்மை நிலை உணர்ந்து மயக்கமுற்றாள்....
Double heart attack
Double heart attack message by a girl to a boy:
.
.
.
1st Msg:" Lets break up now, its all over..
.
.
.
2nd Msg:" Sorry, Sorry, Sorry! That
was not for you
.
.
.
1st Msg:" Lets break up now, its all over..
.
.
.
2nd Msg:" Sorry, Sorry, Sorry! That
was not for you
அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ
செத்துப்போன பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு வீடு திரும்பிட்டு இருந்தார் ஒருத்தர்.
அப்போ திடீர்னு வானத்துல இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம். உடனே நம்ம ஆளு மேல பாத்து சொன்னானாம்
*
*
*
*
*
"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"
Wife
Police Officer: I arrest people, But,
when I go home, I'm under house arrest, by Wife
Professor: I give lectures to students,
But, when I go home, I get Lectured hourly, from wife
CEO: I'm the Boss, But, when I go
home, I always feel like an employee, of my wife
Judge: I give Justice, but when I go home, I Beg for
Justice, from my wife
when I go home, I'm under house arrest, by Wife
Professor: I give lectures to students,
But, when I go home, I get Lectured hourly, from wife
CEO: I'm the Boss, But, when I go
home, I always feel like an employee, of my wife
Judge: I give Justice, but when I go home, I Beg for
Justice, from my wife
கையில அடிபட்டிச்சு
ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான்
என்னாப்பா என்ன பிரச்சனை ?
கையில அடிபட்டிச்சு.
சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார்.
இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம்.
என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க.
இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன்.
என்னாப்பா என்ன பிரச்சனை ?
கையில அடிபட்டிச்சு.
சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார்.
இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம்.
என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க.
இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன்.
யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!!
நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க
எண்ணி அவ்வாறு செய்தேன்”
இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”
இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.
அவன் சொன்னான்”நான் ஒரு
வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!!
Friday, September 6, 2013
ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?
உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி Mr. தானா கீனா கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். கடவுளே.. .
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது.....
அப்போது தானே அவள் உன்னைக் காதலிப்பாள்!!!
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது.....
அப்போது தானே அவள் உன்னைக் காதலிப்பாள்!!!
OMG
Husband sent a text to his wife at night,
“Hi I will get late, please try and wash all my dirty clothes and make sure you prepare my favorite dish before I return.”
She didnt reply..
He sent another text,
“And I forgot to tell you that I got an increase in my salary at the end of the month I’m getting you a new car”
She text back, “OMG really?”
Husband replied,
“No I just wanted to make sure you got my first message”.
“Hi I will get late, please try and wash all my dirty clothes and make sure you prepare my favorite dish before I return.”
She didnt reply..
He sent another text,
“And I forgot to tell you that I got an increase in my salary at the end of the month I’m getting you a new car”
She text back, “OMG really?”
Husband replied,
“No I just wanted to make sure you got my first message”.
15 மாடி
நாராயணசாமி ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்.
அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.
தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.
அதை நாராயணசாமியிடம் காட்டிய ஊழியர்,
"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 15 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்.
அங்கிருந்து ரிமோட்டை இயக்க, நாராயணசாமியின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.
நாராயணசாமிக்கு பரம திருப்தி..
ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த நாராயணசாமி சொன்னார்,
"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 15 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!"
50-50
Two girls found Rs 1000 on road
.
.
.
.
. .
Girl 1 : what to do with this
money now?
.
.
.
. .
.
.
Girl 2 : lets take 50-50
.
. .
.
.
.
.
Girl1 : okay but wat about other
900.
.
.
.
.
. .
Girl 1 : what to do with this
money now?
.
.
.
. .
.
.
Girl 2 : lets take 50-50
.
. .
.
.
.
.
Girl1 : okay but wat about other
900.
Wednesday, September 4, 2013
மந்திரி
ராதா: உன் புருஷன் மந்திரியா இருந்தாலும் இன்னும் ஏன் பாய்ல படுக்கறார்?
கீதா: அவருக்கு காலைல ஏந்திருக்கும் போதே ஏதாவது சுருட்டணும்...
கீதா: அவருக்கு காலைல ஏந்திருக்கும் போதே ஏதாவது சுருட்டணும்...
சில உண்மையை மறைத்து
விவாகரத்து கோருபவர் நீதிபதியிடம்...
''சில உண்மையை மறைத்து இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..அதனாலே விவாகரத்து வேணுங்க
ஐயா..''
நீதிபதி,,,,
''அப்படி என்ன உண்மையை மறைச்சாங்க..?''
விவகாரத்துகோருபவர்.....
''பெண்ணுக்கு...காரத்தே......கு ங்பூ....இதெல்லாம் தெரியும்னு சொல்லவே இல்லை....''
''சில உண்மையை மறைத்து இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..அதனாலே விவாகரத்து வேணுங்க
ஐயா..''
நீதிபதி,,,,
''அப்படி என்ன உண்மையை மறைச்சாங்க..?''
விவகாரத்துகோருபவர்.....
''பெண்ணுக்கு...காரத்தே......கு
வெறும் வயித்துல
டாக்டர் : இந்த மருந்தை வெறும் வயித்துல தினமும் காலையிலே சாப்பிடுங்க
நோயாளி : பனியன் கூட போட்டிருக்கக்கூடாத டாக்டர்
டாக்டர் : !!!???
நோயாளி : பனியன் கூட போட்டிருக்கக்கூடாத டாக்டர்
டாக்டர் : !!!???
ஆயிரம் பொற்காசுகள்
ஒரு குட்டி கதை:
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.
அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.
உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.
உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.
அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.
உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.
உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?
கேபிள் டிவி நிறுவனத்துக்கு நம்ம நாராயணசாமி வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை.. முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..
மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்..” எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?”
அவர் “25 கம்பங்கள்” என்று பதிலளித்தார்..
நாராயணசாமிக் கேட்க, அவர் “5″ என்றார். முதலாளி வியப்படைந்து..
” என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
” அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு… போய்ப் பாருங்க..!!
மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்..” எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?”
அவர் “25 கம்பங்கள்” என்று பதிலளித்தார்..
நாராயணசாமிக் கேட்க, அவர் “5″ என்றார். முதலாளி வியப்படைந்து..
” என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
” அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு… போய்ப் பாருங்க..!!
Monday, September 2, 2013
கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்?
“”ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக்
கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சோ?”
“”ஏன்?”
“”யாராவது பூச்சி மருந்து கேட்டால்… சாப்பிடவா? பார்சலா?ன்னு கேட்கிறார்”
Thursday, August 29, 2013
Renduliam Limit thaandinal
Love'Kum Food'kum
Oru Vithyasam
Enna theriyuma??
Renduliam Limit thaandinal
VOMIT THAN
Ithu Yosikka Vendiya Time:
Ithu Yosikka Vendiya Time:
Girls
Rakki katti Brother’s day kondadumpothu,
Boys yen
Thaali katti husband day kondada kudathu?
Yosinga..
ATM machine'la
Senthil:
Annae, ATM machine'la visiting card'da potta
ennoda PANAM varuma 'nae?
Gounds:
Indha maari kelvi'ya innoru murai kaetta,
unnoda PONAM dhan varum
Naan solara thannila neechal adipiya?
Parthiban: Naan solara thannila neechal adipiya?
Vadivelu: Naan evlo periya neechal veeran theriuma??
Parthiben: Intha tumler thannila neechal adi pakkalam
Vadivelu: Ennaathuu!!???
credit card
Orutharukku Bank-la irunthu notice vanthuchu…
“Sir, Ungaloda credit card thriuttu poi irukku…aanal, neenga innum oru report kooda kudukkalayea yen sir???”
Atharkku antha Person-oda reply…
“Athu thiruttu ponathu romba sandhosamdhanga….
Yen-na andha thirudan ennoda wife-i vida limit-ta dhan Selavu panran...”
Monday, August 26, 2013
அவை என்ன மிருகங்கள்..?
ஐ.நா.சபையின்
நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்
சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை
வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன்
அமெரிக்கர் சொன்னார்.. "
என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"
அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..
" என் மாடுகளின் கொம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"
அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..
" அவை என்ன மிருகங்கள்..?"
வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...
" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"
இது எப்புடி இருக்கு...!
ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ
ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க
உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள்
வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச்
சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில்
ஒரு தலையணை கட்டச் சொல்லிக்
கேட்டான்.பத்து அடியில்
தலையணை கிழிந்து அவன் பலமான
காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில்
இருதலையணை கட்டச் சொன்னான்;
பதினைந்து அடியில்
தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
மூன்றாவது இந்தியன்., ஷேக் சொன்னார் ”எனக்கு
இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ
இரண்டு வேண்டியவை கேட்கலாம்"
இந்தியன் கேட்டான். ”எனக்கு 30க்குப் பதில் 50
கசையடி வேண்டும்”
ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்.
அடுத்தது”…
”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில்
கட்டுங்கள்!”
இது எப்புடி இருக்கு...!
ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க
உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள்
வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச்
சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில்
ஒரு தலையணை கட்டச் சொல்லிக்
கேட்டான்.பத்து அடியில்
தலையணை கிழிந்து அவன் பலமான
காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில்
இருதலையணை கட்டச் சொன்னான்;
பதினைந்து அடியில்
தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
மூன்றாவது இந்தியன்., ஷேக் சொன்னார் ”எனக்கு
இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ
இரண்டு வேண்டியவை கேட்கலாம்"
இந்தியன் கேட்டான். ”எனக்கு 30க்குப் பதில் 50
கசையடி வேண்டும்”
ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்.
அடுத்தது”…
”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில்
கட்டுங்கள்!”
இது எப்புடி இருக்கு...!
Which machine can I use ?
A man asks a trainer in the gym :
.
.
.
.
"I want to impress that beautiful girl,
.
.
.
.
Which machine can I use ?"
.
.
.
.
The trainer replied; “Use the ATM outside the gym!!!"
“இல்லை மேடம்”
ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்..உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!..
ஆட்டிறைச்சிக் கடை
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம்
மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக்
கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க
வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன்
அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட
இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப்
பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக
உனக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!
Tuesday, August 13, 2013
# டெரர் பசங்க...
அப்பா: இன்னைக்கு லீவ் தானே அப்புறம் என்ன படிக்கிறே?
மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.
அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?
மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …
மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.
அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?
மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …
Monday, August 12, 2013
அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்
தேசிய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.
"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.
"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.
வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:
"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''
ஹலோ சூரியன் FM
ஹலோ சூரியன் FM
வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன்
பேசுறேன்..!!
சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
என் பொண்டாட்டி என் கூட
சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள
இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..
அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்
வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க...
வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன்
பேசுறேன்..!!
சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
என் பொண்டாட்டி என் கூட
சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள
இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..
அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்
வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க...
திருட்டுப் போச்சு
நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
அஞ்சு நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
பாம்பு
ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!
மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
போலி டாக்டர்
நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்
தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
அது ஒரு விடுமுறை நாள்.
அது ஒரு விடுமுறை நாள்.
சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.
குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”
உள்ளே இருந்து மனைவி சொன்னாள்.....
“நான்தேன் பாடிட்டு இருக்கேன்”
சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.
குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”
உள்ளே இருந்து மனைவி சொன்னாள்.....
“நான்தேன் பாடிட்டு இருக்கேன்”
என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு
"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''
"வெரி குட்.....அப்புறம்?''
"அப்புறமென்ன .. என் கொலுசைக் காணோம்''
"வெரி குட்.....அப்புறம்?''
"அப்புறமென்ன .. என் கொலுசைக் காணோம்''
பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே?
ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
சொன்னா புரியாது
அவன் : சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன்.
அவள் : என்ன படத்துக்கு போற?
அவன் :"சொன்னா புரியாது"
அவள் :அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு.
அவன் :ஏ படம் பேருதான் சொன்னா புரியாது.
அவன் :இப்போ சொல்லுவியா? மாட்டியா?
அவன் :சொன்னா புரியாது.
அவள் :ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை.
அவன் :அட ச்சீ,வைடி போனை.
நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி காதல் பாதில முடியுது
அவள் : என்ன படத்துக்கு போற?
அவன் :"சொன்னா புரியாது"
அவள் :அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு.
அவன் :ஏ படம் பேருதான் சொன்னா புரியாது.
அவன் :இப்போ சொல்லுவியா? மாட்டியா?
அவன் :சொன்னா புரியாது.
அவள் :ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை.
அவன் :அட ச்சீ,வைடி போனை.
நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி காதல் பாதில முடியுது
Thursday, August 8, 2013
எனக்கு சாவே வரக்கூடாது
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்....
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவநுக்கு 'சா' வே வரல!
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவநுக்கு 'சா' வே வரல!
மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?
கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"
.
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க மா இல்லே..?"
.
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
.
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"
.
# எப்படி டி உங்க கூட வாழுறது....
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"
.
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க மா இல்லே..?"
.
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
.
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"
.
# எப்படி டி உங்க கூட வாழுறது....
Subscribe to:
Posts (Atom)